Saturday
Sep 04th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அணு சக்தி ஒப்பந்தம் : இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடையும்

E-mail Print PDF

இஸ்ரோ தலைவர் பேட்டி : அணு சக்தி ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த ஒப்பந்தம் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் கூறினார்.

கேள்வி: இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தால் நமது நாட்டுக்கு நன்மை கிடைக்குமா?

 

பதில்: இந்த ஒப்பந்தம் மூலம் நமது நாட்டிற்கு பல நன்மைகள் ஏற்படும். குறிப்பாக அணு ஆராய்ச்சியிலும், மின் உற்பத்தியிலும் அதிக அளவு பயனடையலாம். நமது நாட்டு விவசாயிகளின் மின் தேவையை பூர்த்தி அடையச் செய்யலாம். விவசாய தொழில் வளர்ச்சி அடைவதன் மூலம் நமது நாடு பொருளாதாரத்திலும் வளர்ச்சி அடையும். அதோடு மட்டுமின்றி நமது நாடு மற்ற உலக நாடுகளுடன் பரஸ்பர வளர்த்துக் கொள்ள உதவும். இந்த ஒப்பந்தம் மூலம் விஞ்ஞான ரீதியில் நாம் மிகப்பெரும் வளர்ச்சியை எட்டலாம்.


கேள்வி: என்.எஸ்.ஜி. அமைப்பில் நமது நாடு இணைந்துள்ளதால் நமக்கு பாதிப்பு ஏற்படுமா?
பதில்: பாதிப்பு எதுவும் ஏற்படாது. என்.எஸ்.ஜி. அமைப்பின் மூலம் நமக்கு தேவையான அணுசக்தி தாராளமாக கிடைக்கும்.

கேள்வி: சந்திரனுக்கு ராக்கெட் அனுப்பும் முயற்சி எந்த அளவில் உள்ளது.
பதில்: அதற்கான ஆயத்த பணிகள் திட்டமிட்டபடி நடந்து வருகிறது. அக்டோபர் இறுதிக்குள் இதற்கான வடிவம் கிடைத்துவிடும் என்று எதிர்பார்த்து செயல்பட்டு வருகிறோம்.
இவ்வாறு மாதவன் நாயர் கூறினார்.

 


நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!
Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate::?::(
:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.
 
Banner

எங்கள் செய்திச்சேவையைபெற


1
விஷூவல் மீடியா

ட்விட்டரில் தொடர