Thursday
Mar 11th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அணு ஒப்பந்தம் : ரூ.1.7 லட்சம் கோடி முதலீடு; 400 நிறுவனங்கள் பயன் பெறும்!

E-mail Print PDF

வியன்னாவில் நடைபெற்ற என்எஸ்ஜி அமைப்புகளின் கூட்டத்தில் சீனா செய்த சதியினையும் சமாளித்து  அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தத்துக்கு அணு எரிபொருள் சப்ளை செய்ய என்எஸ்ஜி ஒப்புதல் தந்துவிட்டதால், அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் ரூ.1.72 லட்சம் கோடி வெளிநாட்டு முதலீடு குவியும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 400 நிறுவனங்களுக்கு பலன் கிடைக்கும். அணு சக்தி வர்த்தகத்தில் ஈடுபட இந்தியாவுக்கு இனி கதவுகள் திறக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து அணு மின் உற்பத்தியில் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடும் இந்தியாவில் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அணுசக்தி ஒப்பந்தத்தால் அணுசக்தி துறையைச் சேர்ந்த 200 நிறுவனங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. அது போக 200 சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கும் இதில் பலன் கிடைக்கும். இவை உதிரி பாகங்களை தயாரித்து தரும். இதன் மூலம் குறைந்த செலவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
அணுசக்தி ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் கிடைத்ததை சிஐஐ,பிக்கி போன்ற தொழில் துறை அமைப்புகள் வரவேற்றுள்ளன. உயர் தொழில்நுட்பத்தில் இனி இந்தியாவுடன் வர்த்தகம் செய்யலாம் என்ற நம்பிக்கை பிற நாடுகளிடம் அதிகரிக்கும் எனத் தெரிவித்து உள்ளன.

இந்நிலையில் வெளிநாட்டு நிறுவனங்கள் ரூ.1.72 லட்சம் கோடி அளவுக்கு, இந்தியாவில் முதலீடு செய்ய இனி வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

குஜராத், ஆந்திரா, ஒரிசா, மேற்கு வங்கத்தில் அணுசக்தி பூங்காககள் அமைக்கவும் தேசிய அணுமின் சக்தி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு இடத்திலும் 1000 மெகாவாட் திறனுள்ள 8 ஈணுலைகள் நிறுவப்படும். மொத்தம் 32 உலைகள் இருக்கும். வெளிநாட்டு அணுசக்தி நிறுவனங்களின் பார்வை இப்போது இந்தியா மீது உள்ளது.

பிரானசிந் அரிவா என்பி, ரஷ்யாவின் ரோசாடாம், அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக், டோஷிபாவின் வெஸ்டிங் ஹவுஷ் ஆகியவை இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வத்துடன் இருக்கின்றன. யுரேனியம் சப்ளை செய்யும் ஆஸ்திரேலியா, கனடா நாட்டு நிறுவனங்களும் தயாராக உள்ளன.

 


நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!
Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate::?::(
:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.
 
Banner

எங்கள் செய்திச்சேவையைபெற


ட்விட்டரில் தொடர

குட்டி ad

Low Cost Webhosting
Webhosting @ 499