Saturday
Sep 04th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னை புத்தக கண்காட்சியில் - வெறும் வார்த்தை கவிதை புத்தகம்

E-mail Print PDF

வெறும் வார்த்தை

கவிதை தொகுப்பு

ஆசிரியர்: திரு.வெங்கட்ரங்கன்(ராதாகிருஷ்ணன்)ஆசிரியரைப்பற்றி : திரு.ராதாகிருஷ்ணன் அவர்கள் லண்டனில் மருந்தியல் ஆய்வாளராக பணிபுரிந்துவருகின்றனார். இவர் தற்போது பல வகையான ஆய்வுக்கட்டுரைகளையும், அறிவியலை  மையமாக வைத்து நுனிப்புல் என்ற புத்தகத்தையும் வெளியிட்டுள்ளார்.



மின்னஞ்சல் முகவரி :
radhpara(at)gmail.com

வெளியீட்டாளர் : தமிழ் அலை

சென்னை புத்தக கண்காட்சியில் அரங்கு எண் : 402

மதிப்புரையாளர் : திரு.
K.H.M.ஸதக்கத்துல்லாஹ்.

மதிப்புரை :

அன்பின் வெங்கடரங்கன் அவர்களுக்கு,  

தங்களின்  "வெறும் வார்த்தைகள்" படித்தேன். முடித்ததும் வெறும் வார்த்தைகளா இவை? என்ற வினா எழுந்தது உண்மை. பதில். இவை வெறும் வார்த்தைகள் அல்ல. பெரும் வார்த்தைகள். மற்றவர்களும் பெற வேண்டிய வார்த்தைகள்.  

ஆன்மீகம், அறிவியல், காதல், மனித நேயம், ஜீவகாருண்யம் என்று  சொல்ல வந்த வார்த்தைகள் அடக்கத்திலும், ஆற்றலிலும் அடர்த்தி மிக்கவை.  

உறங்'குகை'யில் உயிர் நிற்கும் இடமேது

உணர்வில்லா  நிலையில் கூட

உன்ன மட்டும் உணர்தலுக்கு நிகரேது.

இல்லை நீயெனச் சொல்லுதற்கு சொல்லைத் தந்து விட்டு

எல்லையிலா அண்டவெளியில் மறைந்து நின்று

காத்து  அருளிகின்றாயோ அறிவதற்கு...

இந்த  வினாக்கள் மனத்தில் எழுப்பும்  அதிர்வலைகளை வார்த்தகளுக்குள் வரையறுத்தல் சிரமம். உறங்குகையில் என்பதைக் கூட இருவிதமாகப் பொருள் கொள்ளத் தூண்டுகிறது. உறங்குதல் என்பது தூக்கம். அதையே பிரித்து (குகையை எண்ணிப்) பார்த்தால் புரியும் பொருளின் தளம் அர்த்தம் பெறுகிறது. சலனமற்ற நீர் வெளியில் வந்து விழும் கூழாங்கல் எழுப்பிச் செல்லும் அலைகளைப் போல் ஞான வட்டம் முடிவிலியாய் விரிந்து கொண்டே போகிறது.  

உருவம்  இல்லா உன்னோடு

உருவகம் இல்லாத காதல்.

அரூபமான இறைவனைப் போற்ற ரூபங்கள் அவசியமல்ல. அவன் அத்தனை மொழிகளும்  தெரிந்தவன். மௌனம் தரும்  அடர்த்தியை பேச்சு மொழி தந்து  விடாது. காதலின் பால பாடம்  மௌனம் தான். அறியாமையை  அறிந்து கொள்வது தான் ஆன்மத் தேடலின் ஆதி. இந்தச் சூட்சுமத்தை  ஆங்காங்கே பொடி வைத்து வெடி வைத்திருக்கிறீர்கள்.  

நிலத்தடியில்  புதைந்த விதை. தருணம் வந்ததும் துளிர் விட்டுத் தளிர் விடுவது  போல நிச்சயம் பலன் வரும்  தங்கள் வார்த்தைகளுக்கு.  அதற்கான நம்பிக்கையை நிறையவே விதைத்திருக்கிறீர்கள். வாய்மைக்கும், பொய்மைக்கும் இடையில் உள்ள நுண்ணிய திரையை உரசிப் பார்க்கும் கேள்விகளை நிறையவே எழுப்பியிருக்கிறீர்கள். சில கவிதைகளை இன்னும் செழுமைப்படுத்தியிருக்கலாமே என்று சொல்கிறது வாசக மனம்.  

"வெறும்  வார்த்தைகள்" மனித மனங்களில் மாற்றத்தைப் பெற்றுத் தரும். அப்போது அவை அட்சர இலட்சம் பறும்.  

எல்லாருக்கும் பொதுவான இறைவனின் ஆசியையும், ஞானத்தையும் அனைவருக்கும் வேண்டியவனாய்...

என்றும் அன்புடன்,

K.H.M.ஸதக்கத்துல்லாஹ்.

நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!
Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate::?::(
:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.
Last Updated ( Saturday, 02 January 2010 10:27 )  
Banner

எங்கள் செய்திச்சேவையைபெற


1
விஷூவல் மீடியா

ட்விட்டரில் தொடர