- எஸ்கா
படைப்புகளிலேயே மிகக் கடினமானது நகைச்சுவையைப் படைப்பது. முக்கி முனகி ரொம்பக் கஷ்டப்பட்டு ஜோக்கடித்தால் - ஆங்.. அப்புறம்? என்ற ஆசாமிகள்தான் அதிகம் இங்கே. அதிலும் நகைச்சுவையாக எழுதுவது உயிரை எடுக்கும் வேலை.

அதிலும் ஜோக் எழுதுவது என்பது "அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி குறுகத்தரித்த" என்று அவ்வை சொன்னது போன்ற விஷயம். அதிலும் விகடனில் ஜோக் எழுதுவது அரிசியில் படம் வரைவதைப் போன்ற வேலை. நுணுக்கம் மிக அவசியம். அந்த நுணுக்கம் கைவந்த ஆசாமிகள் இங்கே உண்டு. தஞ்சை தாமு, சாரதி டேச்சு, பேச்சி, அ.ரியாஸ், சி.பி.செந்தில்குமார், சகிதா முருகன், ஜெயக்குமார், மாணிக்கவாசகம் என்று விகடனை முழுங்கி நகைச்சுவைக் கொட்டை போட்ட ஜோக் எழுத்தாளர்கள் பலர்..
அப்படிப்பட்ட பிரபல ஜோக் எழுத்தாளர்கள் ஆனந்த விகடன் வார இதழில் எழுதி வெளிவந்த ஜோக்குகளில் 300 ஜோக்குகள் தேர்ந்தெடுக்கப் பட்டு "விகடன் ஜோக்ஸ் 300" - என்ற பெயரில் புத்தகமாக தொகுக்கப் பட்டுள்ளன. அதனை கையடக்கப் பிரதியாக வெளியிட்டுள்ளது விகடன் பிரசுரம். இதற்கு முன் "விகடன் ஜோக்ஸ் 2007" மற்றும் "விகடன் ஜோக்ஸ் 2008" (இதில் அடியேனின் ஜோக்கும் ஒன்றே ஒன்று பிரசுரமாகியுள்ளது) என்ற பெயரில் வெளியிட்ட இதே போன்ற கையடக்கப் பிரதிகளின் வெற்றி "விகடன் ஜோக்ஸ் 300" புத்தகத்தை வெளியிட வைத்துள்ளது. என்ன ஒன்று? மற்ற இரு புத்தகங்களை விட விலைதான் கொஞ்சம் அதிகம்.
புத்தகத்தில் மாமியார் & மருமகள் பிரச்சினை, டாக்டர் & பேஷண்ட் விவகாரம், மன்னர் ஜோக்ஸ் போன்ற டிபிக்கல் ஜோக்குளுடன் டான்ஸ் போட்டி, அரசியல்வாதி ஜோக்குகள் போன்ற டாபிகல் ஜோக்குகளும் உண்டு. படித்த விநாடியே குபீரென்று சிரிக்க வைக்கும் ஜோக்குகள் கொஞ்சம் குறைவுதான். அவற்றை அதிகப்படுத்தி அரசியல்வாதி ஜோக்குகளின் எண்ணிக்கையை சற்று குறைத்திருக்கலாம். மற்றபடி மன அழுத்தம் ஏற்பட்டு சோர்ந்து உட்கார்ந்திருக்கும் வேளையில் ஜோக் புக் ஆறுதலான ஒரு மருந்து (இதை மட்டும் நான் சொல்லவில்லை ஐயா, ஆசிரியர் சொல்கிறார்)
பதிப்பாளர்: பா.சீனிவாசன்
ஆசிரியர்: வீயெஸ்வி
வெளியீடு: விகடன் பிரசுரம்
பகுதி: நகைச்சுவை
விலை: ரூ. 85
வெளியீடு: விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
e.mail: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
yeskha(at)gmail.com

நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!

kalakunga - yaska - indha article or...
Very Interesting & so many unknown de...
hi read this