பிரிட்டனின் தலைசிறந்த மருத்துவமனைகளான போர்த் வேலி ராயல் மருத்துவமனை, ஸ்டிர்லிங்ஷியர் மருத்துவமனைகளில் ரோபாட்களை பணியமர்த்த தேசிய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ள அரசு, இது மனிதத் தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கை அல்ல என்றும், தொழில்நுடபத்துறையில் தாங்களும் வளர்ச்சியடைந்ததை எடுத்துக்காட்டவே இந்த முயற்சி என்று தெரிவித்துள்ளது. பணியமர்த்தப்படும் ரோபாட்கள், மருத்துவக்கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கும், வளாகங்களை தூய்மைப்படுத்துவதற்கும், உணவு மற்றும் மருந்துகளை வழங்குவதற்கும் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் ரோபாட்கள் மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவம், அங்கு அத்திட்டம் வெற்றி பெற்றுள்ளதாகவும், இந்த ரோபாட்கள் லேசர் ஒளிக்கற்றை மூலம் இயங்கக்கூடியது எனவும், இந்த ரோபாட்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் மற்றும் கண்காணிப்பில் பொறுப்பில் திறன் பெற்றவர்கள் விரைவில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும், மருத்துவமனைகளின் ரோபாட்களின் செயல்பாடுகள் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் துவங்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!








ரோபோக்கள் சரி
தேவ்