இந்தியாவின் தகவல் தொடர்பு சேவைகள் வழங்கும் தலையாய நிறுவனங்களுள் ஒன்றான, வோடபோன் எஸ்ஸார், தமிழ்நாட்டில் உள்ள அதன் பிரிபெய்டு வாடிக்கையாளர்களுக்கு “வோடபோன் அவசர கிரெடிட்” திட்டத்தை இன்று அறிவித்துள்ளது. இச்சேவையின் வழியாக, வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கில் உள்ள நிகர மதிப்பிலிருந்து தங்களது அன்புக்குரிய நபர்களது மொபைல் கணக்கிற்கு ரூ.5-ஐ மாற்ற முடியும். இந்த உடனடி “வோடபோன் அவசர கிரெடிட்” திட்டத்தின் வழியாக, நடுவழியில் ரயில் அல்லது பேருந்தில் பயணம் தடைபட்டு, தத்தளிக்கின்ற நிலைபோன்ற அவசரகால சூழல்களில்கூட வாடிக்கையாளர்கள், தடையற்ற தகவல் தொடர்பை பயன்படுத்த இயலும். 5ரூ. பேலன்ஸ் தொகையை நன்கொடையாளர் மாற்றமுடியும். இம்மாற்ற பரிவர்த்தணையை தொடங்குகின்ற நபர் கணக்கில் 1ரூ. கட்டணம் வசூலிக்கப்படும். இம்மாற்ற பரிவர்த்தனையை கொடுப்பவர் அல்லது பெறுபவர் யாராயினும் தொடங்க இயலும். இச்சலுகைத் திட்டத்தைப் பயன்படுத்த, தொடங்கிவைக்கும் நபரது கணக்கில் குறைந்தபட்ச தொகையாக ரூ.6 இருக்கவேண்டும் மற்றும் பெறுபவர் மற்றும் தொடங்கி வைப்பவர் ஆகிய இருவரும் வோடஃபோன் நெட்வொர்க்கில் குறைந்தது 3 மாதங்கள் இணைந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
மாற்ற பரிவர்த்தனையை தொடங்குவதற்கான பல வழிகள்:
வழங்கும் நபர் மாற்றுவதற்கான வேண்டுகோளைத் தொடங்கும்போது, அவர் *131*(பெறுபவரின் மொபைல் எண்)#. என்ற எண்ணை டயல் செய்ய வேண்டும். மாற்ற பரிவர்த்தணை உடனடியாக செய்யப்படும்.
பெறுகின்ற நபர் மாற்றுவதற்கான வேண்டுகோளைத் தொடங்கும்போது, அவர் *132*(வழங்கும் நபரின் மொபைல் எண்)# என்ற எண்ணை டயல் செய்ய வேண்டும். இதன் பிறகு மாற்றுவதற்கான பரிவர்த்தணையை மேற்கொள்ளுமாறு, வழங்கும் நபருக்கு செய்தி ஒன்று கிடைக்கும்.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!
| < Prev | Next > |
|---|





