பனமரத்துப்பட்டி பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டதால், கடந்த மாதம் 2.70 ரூபாய்க்கு விற்கப்பட்ட செங்கல், 50 பைசா அதிகரித்து 3.20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி, மல்லூர் பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட செங்கல் சூளையில் 5,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
ஆகஸ்ட் மாதத்தில் தொடர் மழை துவங்கியதால், செங்கல் தயாரிப்பு பணி பாதிக்கப்பட்டுள்ளது. செங்கல் தயாரிப்பு பணியில் ஈடுபட்ட 5,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இன்றி உள்ளனர். உற்பத்தி தடைபட்டதால் கடந்த மாதத்தில் 2.70 ரூபாய்க்கு விற்கப்பட்ட செங்கல், மழையால் உற்பத்தி குறைந்ததால் 50 பைசா வரையில் விலை அதிகரித்து 3.20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. விலை அதிகரித்தும் செங்கலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து செங்கல் சூளை உரிமையாளர்கள் கூறியதாவது:முன் கூட்டியே துவங்கிய தொடர் மழையால் செங்கல் தயாரிக்க பயன்படும் மண்ணில் ஈரப்பதம் அதிகம் உள்ளது. மேலும் அச்சில் செங்கல் வார்த்து, அதை உலர தேவையான வெயில் இல்லை. செங்கல் சுட தேவைப்படும் விறகு கூடுதல் விலை கொடுத்து வாங்கி வேண்டி உள்ளது.
மழைக்கு முன் தயார் செய்யப்பட்ட செங்கலை சூளையில் அடுக்கி சுட, மழையில் நனையாதபடி பெரிய கொட்டாய் அமைக்க கூடுதல் செலவு ஆகிறது. அதனால் செங்கல் விலை உயர்த்தி விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு செங்கல் 30 பைசா முதல் 50 பைசா வரையில் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!
| < Prev | Next > |
|---|





