Sunday
Feb 05th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆப‌ர‌ண‌த்த‌ங்க‌த்தின் விலை விர்ர்

E-mail Print PDF
 பண்டிகை காலம் நெருங்குவதால் தங்கம் விலை, மேலும் எகிறும் என, தங்கச் சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 10 கிராம் தங்கத்தின் விலை, 20 ஆயிரம் ரூபாயை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

 

கடந்த ஜூன் மாதத்தில், தங்கத்தின் விலை உச்சத்தை எட்டியபோதும், இந்தியாவில் தங்கத்தின் தேவை, இந்தாண்டின் முதல் ஆறு மாதங்களில் இரண்டு மடங்கு அதிகரித்தது. இந்நிலையில், இன்னும் சில நாட்களில் இந்தியாவில் பண்டிகை காலம் துவங்கவுள்ளது. விநாயகர் சதுர்த்தி, தசரா, தீபாவளி போன்ற பண்டிகைகள் அடுத்தடுத்து வரவுள்ளன. ஏராளமானோர் தங்கம் வாங்குவர் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளன. இதனால், தங்கத்தின் தேவை இந்தியாவில் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்ததாக, பொருளாதார மந்த நிலை காரணமாக அமெரிக்கா டாலரின் மதிப்பு பலவீனமாக உள்ளது. இதன் தாக்கம், இந்தியாவிலும் எதிரொலித்து வருகிறது. பலவீனமான நிதி நிலை, பணவீக்கம் போன்ற காரணங்களால், பங்குச் சந்தை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முதலீடு செய்பவர்கள், தற்போது தயக்கம் காட்டி வருகின்றனர். தங்கத்தில் முதலீடு செய்வதே பாதுகாப்பானது என, அவர்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக, தங்கத்தின் தேவை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த இரண்டு காரணங்களாலும், அடுத்த சில நாட்களில் தங்கத்தின் விலை எகிறும் என, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate::?::(
:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.
 

உள்நுழைய

  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    REGISTER_REQUIRED