அமெரிக்காவின் முன்னணி வங்கியான பேங்க் ஆப் அமெரிக்கா அதன் சொத்துகளை விற்பனை செய்ததன் மூலம் சுமார் $ 1.4 பில்லியன் இலாபம் அடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
இதைப்பற்றி பேங்க் ஆப் அமெரிக்காவின் தலைமை நிர்வாக அதிகாரி பிரையன் மொய்நிதான் தெரிவிக்கையில், 2010 ஆம் ஆண்டில் எங்கள் வங்கி சுமார் $ 2.2 பில்லியன் அளவிற்கு இழப்பில் இருந்தது என்றும் ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு 2012 ஆம் ஆண்டில் நாங்கள் மிக வலுவாகவும் மற்றும் திறமையாகவும் எங்கள் வங்கியை இந்த சரிவிலிருந்து மேம்படுத்தி உள்ளோம் என்று அவர் கூறினார்.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!
| < Prev | Next > |
|---|





