இந்தியா பாகிஸ்தானுக்கு பெட்ரோலிய பொருட்களை ஏற்றுமதி செய்கிறது

E-mail Print PDF

பொருளாதார ஒத்துழைப்பு அளவை அதிகரிக்கும் பொருட்டு இந்தியா பாகிஸ்தானுக்கு பெட்ரோல், டீசல் மற்றும் இதர பெட்ரோலிய பொருட்களை ஏற்றுமதி செய்ய முன் வந்துள்ளது. இதற்காக இப்பொருட்களை கொண்டு செல்ல பைப் லைன்களை அமைக்க இருகின்றது.

மேலும் இதைப்பற்றி பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர், ஜெய்பால் ரெட்டி பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், அடுத்த சில வாரங்களில் இந்தியா பெட்ரோலிய பொருட்களை பாகிஸ்தானுக்கு விநியோகம் செய்யவிருக்கின்றது என்றும் இதற்காக அண்டை நாட்டிற்கு வழங்கப்படும் நீண்ட கால " ஆப்டேக் " உத்தரவாதம் பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் பாகிஸ்தனில் இருக்கும் சுத்திகரிப்பு திறன் அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு தேவையில் பாதியை பூர்த்திசெய்கின்றது என்றும் தற்போது இந்தியாவிலிருந்து மேலும் அதன் தேவையை பூர்த்தி செய்வதற்காக சுமார் 185 மில்லியன் டன் திறன் கொண்ட பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்யவிருக்கின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate::?::(
:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.
 

உள்நுழைய

  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    REGISTER_REQUIRED