Wednesday, 01 February 2012 06:48
Australian firms keen to invest in Indian retail sector
மத்திய அரசின் அன்னிய நேரடி முதலீடு திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு நிலவியதால் அந்த முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. எனினும் ஆஸ்திரேலியா நாட்டின் மிகப்பெரிய சில்லறை வணிக விற்பனை நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளன என்று அந்த நாட்டின் சார்பாக தெரிவிக்கபட்டுள்ளது.
மேலும், அரசாங்கத்தின் நடுநிலை ஆலோசனை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் மீண்டும் இத்துறையில் நுழையமுடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது என்று ஆஸ்திரேலிய வர்த்தக ஆணையாளர் (முதலீடு) கிரேசன் பெர்ரி தெரிவித்துள்ளார். ஆனால் இந்த கருத்து விவசாயிகள் மத்தியில் சிறிது கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்று பத்திரிக்கைகள் கருத்து தெரிவித்துள்ளன.