Thursday, 02 February 2012 19:24
Oil companies stop fuel supplies to Air India
இந்தியாவின் மூன்று தேசிய எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் வியாழக்கிழமை 4 மணி முதல் 6 முக்கிய விமான நிலையங்களான தில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் ஏர் இந்தியாவிற்கு எரிபொருள் வழங்கும் சேவையை நிறுத்துகின்றது.
மேலும் இதைப்பற்றி எண்ணெய் நிறுவனங்களின் நிறுவன அதிகாரி தெரிவிக்கையில், ஏர் இந்தியா விமான நிறுவனம் எண்ணெய் நிறுவனங்களுக்கு திருப்பி செலுத்தவேண்டிய எரிபொருளுக்கான கட்டணத்தை திருப்பி செலுத்ததால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்று தெரிவித்தது. மேலும் எண்ணெய் நிறுவனங்களுக்கு செப்டம்பர் மாதம் நிலுவை தொகையாக சுமார் 4,000 கோடியை கடந்த ஆண்டு செலுத்த தவறிவிட்டது என்றும் இந்த பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு ஏர் இந்தியா நிறுவனம் நிலுவை தொகை அனைத்தையும் 90 நட்களுக்குள் செலுத்தும் என்றும் உறுதி அளித்தது. ஆனால் அதன்படி செலுத்தாததால் நாங்கள் இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கின்றோம் என்று பத்திரிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.