உலகளவில் கணினி வன்பொருள் தயாரிப்பதில் முன்னனி நிறுவனமான ஹெச்சிஎல் இன்போசிஸ்டம்ஸ் தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு மின்னணு கழகத்திடம் (ELCOT) இருந்து மடிக்கணினிகள் தயாரிப்பதற்கு 278 கோடிக்கு ஒப்பந்தத்தை பெற்றுள்ளது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இதைப்பற்றி ஹெச்சிஎல் இன்போசிஸ்டம்ஸ்-இன் செயல் துணை தலைவர் எ.பி.எஸ். பேடி கூறுகையில்,தமிழ் நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மாநில முழுவதும் உள்ள கல்லூரிகளில் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் இலவசமாக விநியோகம் செய்யும் திட்டத்திற்கு அரசு விற்பனையாளராக ஹெச்சிஎல் இன்போவை தேர்வு செய்துள்ளது என்றும் இதற்காக ஐந்து ஆண்டு திட்ட ஒப்பந்தத்தில் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இறுதியாக இந்த திட்டம் மூலம், மொத்தம் உள்ள 9 லட்சம் மடிக்கணினிகளில் முதல் கட்டமாக இரண்டு லட்சம் மடிக்கணினிகள் வழங்க இருக்கின்றது என்றும் இதன் மூலம் மாணவர்களின் பிசி ஊடுருவல் திறன் மற்றும் தொழில்நுட்ப அணுகல் திறன் ஆகியவை அதிகரிக்கும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!
| < Prev | Next > |
|---|





