கொரிய நிறுவனம் மற்றும் மொபைல் உற்பத்தியில் முன்னினி நிறுவனமான சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் அதன் புதிய மறு தயாரிப்பாக சாம்சங் கேலக்ஸி ஏஸ் 2 மற்றும் கேலக்ஸி மினி 2 ஆகிய படைப்பை சந்தையில் வெளியீடு செய்துள்ளது.
மேலும் இதைப்பற்றி அந்த நிறுவனத்தினர் கூறுகையில், தற்போது அறிமுகப்படுத்தியுள்ள இரண்டு மாடல்களுமே நிறுவனத்தின் முந்தைய கேலக்ஸி ஏஸ் மற்றும் கேலக்ஸி மினி ஸ்மார்ட்போன்களின் வழித்தோன்றல்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் இதன் சிறப்பம்சங்களை பற்றி கூறுகையில், இந்த வகை மாடல்கள் ஆண்ட்ராய்டு 2.3 கிங்கர்பிரெட் ஆபரேடிங் சிஸ்டம் -ல் இயங்கும் வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் மார்ச் மாதத்திற்கு பிறகு உலகளவில் இந்த ஏஸ் 2 மற்றும் மினி 2 ஆகிய இரண்டும் வெளியிடப்படும் என்றும் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!
| < Prev | Next > |
|---|





