சிறு, குறு, நடுத்தர பிரிவில் உள்ள தொழில் நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீடு வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த தொழில் நிறுவனங்களில் அதிக பட்சமாக 24 விழுக்காடு அந்நிய நேரடி முதலீடு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இனி பெரிய தொழில் நிறுவனங்களுக்கு உள்ளது போல் அந்நிய நேரடி முதலீடு கொள்கை கடைபிடிக்கப்படும்.
இது வரை சிறு தொழில் பிரிவுகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள ஊறுகாய் தயாரிப்பு, அலுமினிய பாத்திரம் உற்பத்தி உட்பட 21 பொருட்கள் தயாரிக்கும் மற்ற பிரிவில் உள்ள தொழில் நிறுவனங்களில் 24 விழுக்காடுக்கு மேல் அந்நிய நேரடி முதலீட்டிற்கு, அந்நிய நேரடி முதலீடு மேம்பாட்டு வாரியத்திடம் முன் அனுமதி பெற வேண்டும்.
இதற்காக தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை சார்பில் புதிய வழிகாட்டி நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!
| < Prev | Next > |
|---|





