Sunday
Feb 05th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

டெபாசிட் திட்டம் வாபஸ் : SBI

E-mail Print PDF
ஆயிரம் நாள் டெபாசிட் திட்டத்தை ஸ்டேட் வங்கி கைவிட்டுள்ளது. நாளை முதல் இத்திட்டம் முடிவுக்கு வருகிறது. வங்கிகளிடம் நிதிப்பற்றாக்குறை நிலவிய சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஆயிரம்நாள் டெபாசிட் திட்டத்தை ஸ்டேட் வங்கி அறிமுகப்படுத்தியது.
அப்பொழுது 10.5 சதவீத வட்டி அறிவிக்கப்பட்டது. அதற்குப் பிறகு பல முறை டெபாசிட்டுகளுக்கான வட்டி குறைக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதத்துக்குப் பின் 4 முறை வட்டி குறைக்கப்பட்டது. இப்பொழுது இத்திட்ட டெபாசிட்டுகளுக்கு 7.25 வட்டி வழங்கப்படுகிறது. 1000 நாள் டெபாசிட் திட்டம் செப்டம்பர் 8ம் தேதியுடன் 11 மாத காலத்திலேயே முடிவுக்கு வருவதால் அத்திட்டத்தில் போடப்பட்ட டெபாசிட் தொகை மற்றும் கணக்குகள் எல்லாம் 2 முதல் 3 ஆண்டு கால டெபாசிட்டுகளாக மாற்றப்படுகின்றன. அதற்கான வட்டி 7 சதவீதமாக இருக்கும். வங்கியின் டெபாசிட் திட்டங்களை மறு பரிசீலனை செய்யும் பொழுது 1000 நாள் டெபாசிட் திட்டத்தை கைவிட முடிவு செய்யப்பட்டது. எதிர்காலத்தில் இதே திட்டம் மீண்டும் வரலாம் என ஸ்டேட் வங்கின் தலைமை நிதி அதிகாரி எஸ்.எஸ்.ரஞ்சன் கூறினார். 1000 நாள் டெபாசிட் திட்டம் சிறு டெபாசிட்தாரர்களை பெருமளவில் வங்கிக்குத் தந்தது. இத்திட்டத்தின் கீழ் திரட்டப்பட்ட தொகையைப் பயன்படுத்தி கூடுதல் வட்டியில் பெறப்பட்ட பெரும் டெபாசிட்டுகளை வங்கி திருப்பிச் செலுத்தும். இது வங்கியின் நிதி நிலைமை வலுப் பெற உதவும் என வங்கி கருதுகிறது.

நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate::?::(
:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.
 

உள்நுழைய

  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    REGISTER_REQUIRED