இந்தியர்கள் சேமித்து வைத்திருக்கும் தங்கத்தின் அளவு 15,000 டன். ஆனால், அமெரிக்க அரசிடமே 4,000 டன் தங்கம்தான் உள்ளது என்று உலக தங்க கவுன்சில் கூறுகிறது. அமெரிக்காவில் லேமன் பிரதர்ஸ் வங்கி திவாலான பிறகு தங்கத்தின் விலை பெருமளவு உயர்ந்து வருகிறது. இதற்கு காரணம், பொருளாதார ஸ்திரத்தன்மை இல்லாதபோது, முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது தங்கள் முதலீட்டை திருப்பி விடுவதுதான் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
லேமன் பிரதர்ஸ் திவாலான நாளன்று, ஒரு அவுன்ஸ் தங்கம் (28.34 கிராம்) ரூ.37,632க்கு விற்பனையானது. அதன்பின் 3 நாட்களில் அது ரூ.44,256க்கு உயர்ந்துவிட்டது. இந்தியாவில் 10 கிராம் தங்கம் ரூ.11,640ல் இருந்து ரூ.13,541 ஆனது.
இந்த ஆண்டு பிப்ரவரி 19ல், இந்தியாவில் 10 கிராம் தங்கம் ரூ.16,090க்கு விற்பனையானது. அதைத்தொடர்ந்து, அதே மாதத்தின் கடைசி வாரத்தில் விலை குறைந்தது. இப்போது பிப்ரவரி மாத நிலையில் இருந்ததைப்போன்று 10 கிராம் தங்கம் ரூ.16,000மாக உள்ளது. பொருளாதார மந்தநிலை, டாலர் மதிப்பு ஏற்ற, இறக்கம் ஆகியவற்றால் தங்கம் சிறந்த முதலீடாக மாறியுள்ளது.
உலக தங்க கவுன்சில் எடுத்த புள்ளிவிவரப்படி, கடந்த ஆண்டில் இந்தியர்கள் தங்கள் வீடுகளில் சேமித்து வைத்திருந்த தங்கத்தின் அளவு 15,000 டன். அமெரிக்க அரசிடமே 4,000 டன் தங்கம்தான் கையிருப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி, லேமன் பிரதர்ஸ் வங்கி திவாலாவதற்கு முன் இந்தியர்களிடம் இருந்த தங்கத்தின் மதிப்பு ரூ.18.14 லட்சம் கோடியாக இருந்தது. இப்போது அது ரூ.23.14 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. குறுகிய காலத் தில் ரூ.4.99 லட்சம் கோடி (27 சதவீதம்) மதிப்பு உயர்வதற்கு காரணம், லேமன் பிரதர்ஸ் வங்கியின் வீழ்ச்சிதான்.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!
| < Prev | Next > |
|---|





