Tuesday
Mar 09th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேக்கத்தில் தேங்காய்! ஏக்கத்தில் வியாபாரிகள்!!

E-mail Print PDF
சாமி
தென்னை சார்ந்த தொழில் தமிழகத்தில் முக்கியமான ஒன்றாக விளங்கிவருகிறது. தென்னை மூலம் நிரந்தரமாக வருவாய் இருப்பதால் விவசாயிகள் ஆர்வமாக தென்னை வளர்த்து வருகின்றனர். மேலும் நிலங்கள் எல்லாம் வீட்டுமனைகளாகவும், வீடுகளாகவும் மாறிவருவதால் விவசாயத்துக்கு ஆட்கள் பற்றாக்குறை நிலவுவதாலும் இருக்கும் நிலப்பரப்பில் பெரும்பாலான பகுதியில் தென்னையை பயிரிட்டு பராமரித்து வருகின்றனர்.

இதனால் தமிழகத்தில் தென்னை தோப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முதலில் கேரளாவில் தான் தென்னை மரங்கள் அதிகம் இருந்தன. ஆனால் சமீபகாலமாக தமிழகம் தென்னை உற்பத்தியில் முதலிடத்தை நோக்கி விரைந்து வருகிறது.
தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் மும்பை உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கேரள மாநில தேங்காய்களை விட தமிழக தேங்காய் சுவை மிகுந்ததாக இருப்பதால் வட மாநிலங்களில் நல்ல கிராக்கி நிலவுகிறது.
இதனால் தமிழக தேங்காய் வியாபாரிகளுக்கு நல்ல வருவாய் கிடைத்து வருகிறது. உள்ளூர் தேவை, ஏற்றுமதி போக எஞ்சியவை தேங்காய் எண்ணை தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்றுமதியில் விவசாயிகளும் நேரடியாக ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபகாலமாக ஈரியோபைட் என்ற சிலந்தி பூச்சியால் தமிழக தேங்காய்கள் சிறுத்தும், காய்களில் வரி விழுந்தும் காணப்படுகின்றன. இதனால் ஏற்றுமதி சற்று பாதித்துள்ளது. மேலும், தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ளதாலும் ஏற்றுமதி சரிந்துள்ளது.
குறிப்பாக கடந்த சில மாதங்களாக தேங்காய் உற்பத்தி பல மடங்கு அதிகரித்துள்ளது. இதுபோல கேரளா, ஆந்திராவிலும் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் வட மாநிலங்களுக்கு ஏற்றுமதியாவது குறைந்துள்ளது. விற்பனை குறைந்துள்ளதால் விலையும் வீழ்ச்சியடைந்துள்ளது.
முன்பு ஒரு தேங்காய் ரூ.4 முதல் 5 ரூபாய் வரை விற்பனையானது. ஆனால் சமீப காலமாக ரூ.3 முதல் ரூ.3.25 வரை மட்டுமே விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். இதனால் தேங்காய் குடோன்களில் தேங்காய் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக தமிழகத்தில் ஆந்திரா, கர்நாடக மாநில எல்லையில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்ட தென் பெண்ணை ஆற்றோரங்கரைகளில் பல லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. இங்கு விளையும் தேங்காய்கள் மும்பை, பூனே நகரங்களுக்கு தினமும் 25 லாரிகளில் ஏற்றுமதி செய்யப்படும். ஆனால் இப்போது ஒரு நாளைக்கு 3 லோடு மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது.
எதிர்காலத்தில் விலை உயரும் என்ற எதிர்பார்ப்பில் குடோன்களில் காய்களை குவித்து வைத்து வருகின்றனர். சிறு வியாபாரிகள் காய்களை உடைத்து கொப்பரைக்காக உலர வைத்து வருகின்றனர். ஆனால் எதிர்காலத்திலும் தேங்காய் விலை எதிர்பார்த்த அளவிற்கு உயராது என தெரிகிறது. இதனால் இருக்கும் காய்களையும், இதற்கு மேல் அறுவடை செய்யப்படும் காய்களையும் இருப்பு வைக்கலாமா அல்லது கிடைக்கும் விலைக்கு விற்று விடலாமா என்ற குழப்பத்தில் தென்னை விவசாயிகளும், வியாபாரிகளும் உள்ளனர்.


நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!
Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate::?::(
:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.
 
Banner

எங்கள் செய்திச்சேவையைபெற


ட்விட்டரில் தொடர

குட்டி ad

Low Cost Webhosting
Webhosting @ 499

உள்நுழைய

  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    REGISTER_REQUIRED