மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே 2010-11 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை, மக்களவையில் ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி இன்று தாக்கல் செய்தார். இதில், பயணிகள் மற்றும் சரக்கு கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய அமைச்சர் மம்தா பானர்ஜி, "எனது ரயில்வே பட்ஜெட்டில் சமூகப் பொறுப்புணர்வுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்தியாவை இணைப்பதே பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியமாகும்.
இந்திய ரயில்வே துறையில் தனியார் மயம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
அதேநேரத்தில், ரயில்வே துறை மூலமாக மிகுதியான வருவாய் ஈட்டவும் வழிவகை செய்யப்படும். இந்தியாவை ரயில்வே மூலம் முழுமையாக இணைப்பதே முக்கிய இலக்காகும். இதற்காக, 'விஷன் 2020' என்ற இலக்கை நிர்ணயிக்கப்பட்டு செயல்படுத்தப்படும்," என்றார்.
2010-11 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்த அமைச்சர் மம்தா பானர்ஜி வெளியிட்ட அறிவிப்புகளின் முக்கிய அம்சங்களாவன:
* வரும் நிதியாண்டின் வருமான இலக்கு ரூ.94,765 கோடி
* மரபுசாரா இனத்தில் இருந்து வருமானம் ரூ 150 கோடியில் இருந்து ரூ. 1000 கோடியாக அதிகரிக்கும்.
* கடந்த ஆண்டை விட 54 மில்லியன் டன் எடை அதிகமாக 944 மில்லியன் டன் எடை உள்ள பொருள்கள் கையாளப்படும்.
* புதிய ரயில் பாதைகள் அமைக்க ரூ.4,411 கோடி ஒதுக்கீடு
* சிக்கன நடவடிக்கை மூலம் ரயில்வே துறை ரூ.2,000 கோடி மிச்சப்படுத்தியுள்ளது.
* 2010 - 11 பட்ஜெட் பற்றாக்குறையை களைய சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
* மரபுசாரா இனத்தில் இருந்து வருமானம் ரூ 150 கோடியில் இருந்து ரூ 1000 கோடியாக அதிகரிக்கும்.
* பயணிகள் கட்டணத்தில் மாற்றமில்லை
* சரக்கு கட்டணத்திலும் மாற்றமில்லை.
* முதல் வகுப்பு பயணிகளுக்கு சேவை கட்டணம் ரூ.40-லிருந்து ரூ.20 ஆக குறைப்பு
* படுக்கை வசதிக்கான சேவை கட்டணம் ரூ.10 குறைப்பு
* உணவு தானியங்கள், மண்ணெண்ணெய்க்கான சரக்கு கட்டணத்தில் பெட்டி ஒன்றுக்கு ரூ.100 குறைப்பு
* ஒவ்வோர் ஆண்டும் புதிதாக 1,000 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரயில் பாதைகள் அமைப்பதை இலக்காக கொண்டு செயல்படுத்தப்படும்.
* ரயில் இருப்பு பாதைகளை நவீனப்படுத்துவதற்கு பட்ஜெட்டில் 10 சதவீதம் ஒதுக்கீடு.
* பயணிகள் அத்தியாவசிய வசதிகளை மேம்படுத்த ரூ.1300 கோடி ஒதுக்கப்படுகிறது.
* மேற்கு வங்கத்தில் 14 புதிய இருப்புப் பாதைகள் அமைக்கப்படும்
* பணிகளை விரைந்து முடிக்க சிறப்பு பணிக்குழு அமைப்பு
* கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்த 120 புதிய ரயில்களில் 117 ரயில்கள் மார்ச் 31-க்குள் இயக்கப்படுகிறது.
* காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளுக்காக சிறப்பு ரயில்கள்
* பல்வேறு வகையிலான சிகிச்சைகளும் அளிக்கக் கூடிய மருத்துவமனைகள் அமைக்கப்படும்.
* பயணிகளுக்கு குறைந்த விலையில் சுத்திக்கரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள்
* மருத்துவமனைகள், நீதிமன்றங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மாவட்ட தலைநகரங்களில் இ-டிக்கெட் வசதி.
* ஆளில்லா ரயில்வே கேட்டுகளில் 4,000 பணியாளர்கள் நியமனம்.
* பயணிகள் பாதுக்காப்புக்காக ரயில்வே பாதுகாப்பு படை பலபடுத்தப்படும். முன்னாள் ராணுவ வீரர்கள் ரயில்வே பாதுகாப்பு படையில் பணி அமர்த்தப்படுவார்கள்.
* ரயில்வே துறைக்காக குடி தண்ணீர் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அம்பால், திருவனந்தபுரம், அமேதி, நாசிக் உள்ளிட்ட 6 இடங்களில் தொடங்கப்படும்.
* பெண் பயணிகள் பாதுகாப்பு அதிகரிப்படும்.
* சோதனை ஓட்டம் அடிப்படையில் இரண்டு அடுக்கு ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.
* அடுத்த 10 ஆண்டுகளில் ரயில்வே துறையில் இருக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சகத்துடன் இணைந்து வீடு கட்டித்தரப்படும்.
* விளையாட்டை மேம்படுத்த டெல்லி, செகந்தராபாத், சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் 5 விளையாட்டு அரங்குகள் அமைக்கப்படும்.
* 93 ரயில் நிலையங்கள் நவீனப்படுத்தப்படும்.
* 2010 - 11 நிதி ஆண்டில் புதிதாக 54 ரயில்கள் இயக்கப்படும்.
* மும்பைக்கு புதிதாக 101 புறநகர் ரயில்கள் இயக்கப்படும்.
* ரயில்வேக்கு சொந்தமான இடங்களில் கல்வி நிறுவனங்கள் அமைக்க ஏற்பாடு.
* கோரக்பூரில் ரயில்வேயின் ஆராய்ச்சி மையம்.
* ரயில்வே ஊழியர்களுக்கு புதிய குடியிருப்புகள்
* ரயில் பெட்டி உற்பத்தி 200-லிருந்து 275-அக அதிகரிப்பு
* ரேபெரலியில் ரயில் உற்பத்தி தொழிற்சாலை விரைவில் தொடங்கப்படும்.
* சென்னை - பெரம்பூர் ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை நவீனமாக்கப்படும்.
* ரயில்வே நிலையங்களில் நவீன கழிப்பறை வசதிகள் மற்றும் பூங்காக்கள் அமைக்கப்படும்
* ரயில்வே துறைக்கு கட்டாயமாக நிலம் கையகப்படுத்தபடமாட்டாது. நிலம் தரும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும்.
* அதிவேக பயணிகள் ரயில்களுக்கான இருப்பு பாதைகள் அமைக்கப்படும்.
* உரிமம் பெற்ற சுமை தூக்கும் தொழிலாளிகளுக்கு காப்பீட்டு திட்டம் அறிமுகம்
* 800 கி.மீ மீட்டர் கேஜ் அகல பாதையாக மாற்றப்படும்
* 700 கி.மீ தூரத்துக்கு இரு வழி பாதைகள் அமைக்கப்படும்
* ரவீந்தரநாத் தாகூரின் 150-வது பிறந்த நாளையொட்டி வங்கதேசத்துக்கு சிறப்பு ரயில்கள்
* பொதுமக்களிடம் ஏற்கனவே வரவேற்பு பெற்ற 'தூரந்தோ' ரயில்கள் மேலும் புதிதாக 10 சேவைகள் அறிமுகப்படுத்தப்படும்.
* 16 பாதைகளில் சுற்றுலா ரயில்கள் விடப்படும்
* வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் இணைப்பு 2012 ஆண்டுக்குள் முடிவடையும்
* சென்னைக்கு புதிய புறநகர் ரயில்
* ரயில் நிலையங்களுக்கு அன்னைதெரேசா, பகத்சிங், திப்புசுல்தான், பகதூர் ஷா ஜாபர் ஆகியோர்களது பெயர்கள் வைக்கப்படுகிறது.
* ரயில்வே துறையில் பணியாற்றும் 80 ஆயிரம் பெண்களுக்காக தங்கும் விடுதிகள் மற்றும் அவர்களது குழந்தைகளுக்காக காப்பகங்கள் அமைக்கப்படும்.
* ஐஐடி மற்றும் சிஎஸ்ஐஆர் போன்ற நிறுவனங்களுடன் சேர்ந்து ரயில்வே ஆராய்ச்சி நிறுவனங்கள் ஏற்படுத்தப்படும்.
* மும்பையில் சரக்கு பெட்டி பழுதுபார்க்கும் தொழிற்சாலை அமைக்கப்படும்.
* பார்சல்கள் மற்றும் சரக்குகள் போக்குவரத்துக்காக பிரீமியம் தட்கல் சேவை அறிமுகப்படுத்தப்படும்.
* ஜிபிஎஸ் அடிப்படையிலான ஓட்டுனர் வழிகாட்டி சேவையை அறிமுகப்படுத்த திட்டம்.
* தங்க ரயில்பாதை திட்டம் அமைக்கப்படும்.
* ரயில்வே நடை மேம்பாலங்களை பயன்படுத்துவதில் பிரச்னை உள்ள இடங்களில் சுரங்க நடைபாதைகள் அமைக்கப்படும்.
* ரயில்வே பாதுகாப்பு படையான ஆர்பிஎப்-ஐ பலப்படுத்தும் விதமாக பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் 'மகிளா பாஹினி' படை அறிமுகப்படுத்தப்படும்.
* விளையாட்டு இட ஒதுக்கீடு மூலமாக அளிக்கப்படும் வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும்.
* ரயில்வே ஊழியர்களுக்காக 'அனைவருக்கும் வீடு' திட்டம் கொண்டு வரப்படும்.
* பிராந்திய மொழிகளில் ரயில்வே நுழைவுத் தேர்வு எழுதலாம்.
* ரயில்வேயில் தற்போது 14 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்.
* ஆண்டுக்கு ரூ.50,000க்கும் கீழான வருவாய் உடைய சிறுபான்மையினத்தவர், பெண்களுக்கு (ரயில்வே) தேர்வுக் கட்டணத்தில் விலக்கு.
* முதியவர்கள், உடல் ஊனமுற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு உதவ அனைத்து முக்கிய ரயில்நிலையங்களிலும் நவீன ரக ட்ராலிகள் அறிமுகப்படுத்தப்படும்.
* அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களின் குழந்தைகளுக்கான சலுகைக் கட்டண வயது வரம்பு 18 ஆக உயர்வு
* புற்றுநோய் நோயாளிகள் மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டியில் இலவசமாக பயணிக்கலாம்.
* அந்தமான் நிகோபர் தீவுகளில் போர்ட் பிளேரிலிருந்து டிக்லிப்பூர் வரை புதிய ரயில்பாதை அமைக்க திட்டம்
நன்றி விகடன்
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!








i need prokar
sir, I am from Ilayangudi.I want to ...
robot ன்னு இருந்தாலும் ரோபோன்னுதான் ...
wah! Great info.
good..................., but common n...