தனியார் துறையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான டாட்டா பவர் நிறுவனம், தற்பொழுது 2,971 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் பல்வேறு திட்டங்களை கொண்டுள்ளது. இந்நிறுவனம், வரும் 2017-ஆம் ஆண்டிற்குள் காற்றாலைகள் மற்றும் சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் வகையில் ரூ.13,000 கோடியை முதலீடு செய்ய உள்ளது.
டாட்டா பவர் நிறுவனத்தின் செயல் இயக்குனர் பன்மாலி அஹ்ரவாலா கூறும்போது, " காற்றாலை மின் உற்பத்தி மூலம் 2,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையிலும், சூரிய சக்தி மூலம் 250 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையிலும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் இதற்காக ரூ.13,000 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களில் காற்றாலைகள் மூலம் 2,000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் இடங்களை தேர்வு செய்து வருகிறது'' என்று தெரிவித்தார்.
டாட்டா பவர் நிறுவனத்திற்கு தற்பொழுது மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய இரு மாநிலங்களிலும் தலா இரண்டு காற்றாலை திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இது தவிர, கர்நாடக மாநிலத்தில் ஒரு காற்றாலை திட்டம் உள்ளது. இவை அனைத்துமாக 195 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்டவை." என்று தெரிவித்தார்
தற்போது நாட்டின் மொத்த மின் உற்பத்தி திறன் 1.50 லட்சம் மெகாவாட் என்ற அளவில் உள்ளது.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!
| < Prev | Next > |
|---|





