இந்திய நாட்டின் மிகப்பெரிய ரியால்டி நிறுவனமான டிஎல்எஃப், சுமார் 450 ஏக்கர் ஒருங்கிணைந்த பரப்பளவில் "ப்ரைமஸ்" என்ற குடியிருப்பு வீட்டு திட்டம் ஒன்றை குர்க்கானில் துவக்கி இருக்கின்றது.
இதைப்பற்றி அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ஆடம்பர வீடுகள் திட்டத்தில் டிஎல்எஃப் கார்டன் சிட்டி நேற்று தொடங்கப்பட்டது என்றும் சுமார் ரூ 500 கோடி மதிப்புள்ள 350 மனைகளை துவங்கிய அன்றே விற்பனை செய்து சாதனை புரிந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
இறுதியாக, இந்த திட்டத்திற்கு பெரும் வரவேற்ப்பும் மற்றும் விற்பனை எண்ணிக்கையை விட அதிக வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளது என்றும் ஆதலால் இன்னும் 2-3 ஆண்டுகளில் குர்க்கானில் ஒருங்கிணைந்த குடியிருப்பு உருவாக்க ரூ 8,000 கோடி (முதலீடு) ஓதுக்கீடு செய்யப்படும் என்றும் டிஎல்எஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!





