சர்வதேச அளவில்,வேளாண்துறைக்கென முதல் இ - புத்தகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை, இந்தியரான பேராசிரியர் பிரபாகரன் நாயர் எழுதியுள்ளார். ' தி அக்ரோனாமி அண்ட் எகானமி ஆப் இம்பார்டண்ட் ட்ரீ கிராப்ஸ் ஆப் தி டெவலப்பிங் வோர்ல்ட்' என்ற தலைப்பிலான இ- புத்தகம், லண்டனில் அறிமுகப்படு்த்தப்பட்டது. எல்ஸ்வியர் அகாடமிக் பிரஸ் மற்றும் மேக்மில்லன் இணைந்து வெளியிட்டுள்ள இந்த இ-புத்தகம், எல்சிவியர் இன்சைட்ஸ் புராஜெக்ட்ஸ் கீழ் தயாரிகப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேராசிரியர் பிரபாகரன் நாயர் கூறுகையில், ஐரோப்பா, ஆசியா மற்றும் அமெரிக்கா கண்டங்களில் உள்ள மண் தன்மையை அறிந்து, அங்கு வளரும் 10 வகையான மர வகைகளின் ' தி நியூட்ரியன்ட பபர் பவர் கான்செப்ட்' டை வைத்து இப்புத்தகம் உருவாக்கப்பட்டு வருவதாகவும், தற்போது லண்டனில் உள்ள் பிரிட்டிஷ நூலகம் மற்றும் அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ஸ்டேட் காங்கிரசனல் நூலகங்களில் இந்த இ-புத்தகம் வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் இந்தியாவிலும் எலெக்ட்ரானிங் பிரிண்டிங் முறையில் அறிமுகப்படுத்த இருப்பதாக அவர் தெரிவித்தார். எல்சிவியர் இன்சைட்ஸ் புராஜெக்ட் மூலம் உருவாக்கப்படும் இந்த இ-புத்தகம் முழுமையடைய குறைந்தது 5 ஆண்டுகள் பிடிக்கும் என்று அவர் மேலும் தெரிவி்த்தார்.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!





