அண்ணாநகரில் இந்தியன் வங்கியின் மதுரை வட்டார அலுவலகத்தில் 'மூத்த குடிமக்களுக்கான நகைக்கடன் திட்ட அறிமுக விழா நடந்தது. துணைப் பொது மேலாளர் கதிரேசன் திட்டத்தை துவக்கி வைத்து பேசியதாவது: மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, மாவட்டங்களில் உள்ள இந்தியன் வங்கி கிளைகளில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் சிறப்பம்சம், அதிகபட்சம் 5 லட்சம் ரூபாய் வரை மூத்த குடிமக்கள் கடன்பெறமுடியும். மாதாந்திர தவணை நகைக் கடன் திட்டத்தில் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு லட்சம் ரூபாய் வரை சேவைக் கட்டணம் இல்லை. 60 வயது முதல் 75 வயது வரை உள்ள மூத்த குடிமக்கள், ஓய்வூதிய கடனை விட வட்டி குறைவாக உள்ள இத்திட்டத்தில் கடன் பெற்று பயன்பெறலாம், என்றார்.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!





