திண்டுக்கல்லில் தனியார் வேலைவாய்ப்புச் சந்தை, நாளை (09/7/2010)நடைபெற உள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் பயன்பெறும் வகையில், தனியார் துறையில் வேலை வாய்ப்பு என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் சிறப்பு கூட்டம், நாளை(ஜூலை 8ல்) வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் நகைக்கடை, ஆஸ்பத்திரிகள், வங்கி, பால் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இன்ஜினியரிங், டிப்ளமோ, பட்டதாரி, அரசு ஐ. டி.ஐ.,களில் படித்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம். இதில் தனியார் நிறுவன நிர்வாகிகள், தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!





