போலி கல்லூரிகள் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் மாணவர்கள் வழக்கு தொடரலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. பீகாரில் உள்ள புத்தா மிஷன் பல் மருத்துவமனை மற்றும் கல்லூரி கடந்த 1993ம் ஆண்டு பல் மருத்துவ படிப்புக்கு மாணவர்களை சேர்ப்பதாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்தது. தனது கல்லூரி, மகத் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்றது என்றும், பல் மருத்துவ படிப்புக்கு அகில இந்திய பல் மருத்துவ கவுன்சிலிடம் அனுமதி பெற்று இருப்பதாகவும் அதில் கூறியிருந்தது. இதை பார்த்து 11 மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்தனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகுதான் அது போலி கல்லூரி என்பது தெரிந்தது. இதையடுத்து மருத்துவ கவுன்சில், மாணவர் களுக்கு உரிய நிவாரணம் வழங்கும்படி கல்லூரிக்கு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கல்லூரி நிர்வாகம் மேல்முறையீடு செய்தது.
நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, எச்.எஸ். பேடி ஆகியோர் இதை விசாரித்து அளித்த தீர்ப்பில், எந்த அனுமதியும் பெறாமல் போலி விளம்பரம் கொடுத்து மாணவர்களை கல்லூரி ஏமாற்றியுள்ளது. மாணவர்களை கல்லூரியில் சேர்த்துக் கொண்டு, அவர்களுக்கு வழங்க வேண்டிய சேவை யை முறையாக தரவில்லை. இதுபோன்ற சேவை குறைபாட்டையும், மோசடியையும் எதிர்த்து கல்லூரியின் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் மாணவர்கள் வழக்கு தொடரலாம். இந்த மாணவர்களின் 2 ஆண்டுகள் பாழாகி இருக்கிறது. அவர்களுடைய எதிர்கால வாழ்க்கையில் இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, ஏமாற்றப்பட்ட 11 மாணவர் களுக்கும் தலா இரண்டு லட்சம் வீதம் ரூ.22 லட்சத்தை கல்லூரி நிர்வாகம் நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!