அமோகமான அரசு கடன் பத்திரம்

E-mail Print PDF
அரசு கடன் பத்திரங்களுக்கு அமோக வரவேற்பு உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையுடன் அரசு கடன் பத்திர விற்பனை முடிவடைந்த நிலையில் ரிசர்வ் வங்கி ரூ. 12 ஆயிரம் கோடியைத் திரட்டியுள்ளது.
வழக்கமான சந்தை எதிர்பார்ப்பைவிட வட்டி விகிதம் அரசு கடன் பத்திரங்களுக்குக் கூடுதலாக இருக்கும் என்பதாலேயே அரசு கடன் பத்திர முதலீட்டை பல நிறுவனங்கள் தேர்வு செய்கின்றன.
கடன் பத்திரங்களை வர்த்தகர்களிடமிருந்து ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்றதால், கடன் பத்திரங்களுக்கான வரவு அதிகமாக இருக்கும் என்பது ஊர்ஜிதமாகியுள்ளது. ரிசர்வ் வங்கியே இதுபோல வர்த்தகர்களிடமிருந்து கடன் பத்திரங்களை வாங்க முன்வந்தது இதுவே முதல்முறையாகும். முன்பு 15 தினங்களுக்கு ஒரு முறை கடன் பத்திர விற்பனை மற்றும் அவற்றை வர்த்தகர்களிடமிருந்து வாங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் இருக்கும். ஆனால் தற்போது வாரந்தோறும் கடன் பத்திர விற்பனை, திரும்பப் பெறுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் நடைபெறுகின்றன.
2019-ம் ஆண்டில் முதிர்வடையும் கடன் பத்திரங்களுக்கான வட்டி விகிதம் 6.90 சதவீதத்திலிருந்து 7.34 சதவீதம் வரை இருக்கும். இது முந்தைய வர்த்தகத்தை விட 4 புள்ளிகள் அதிகமாகும்.
2016-ம் ஆண்டில் முதிர்வடையும் கடன் பத்திரங்களுக்கான வட்டி விகிதம் 7.44 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இது முன்னர் 7.33 சதவீதமாக இருந்ததாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
2016-ம் ஆண்டில் முதிர்வடையும் கடன் பத்திரங்களை முதன்மை வர்த்தகர்கள் ரூ. 430 கோடி அளவுக்கு வாங்கினர். 2021-ம் ஆண்டில் முதிர்வடையும் பத்திரங்களுக்கு வட்டி விகிதம் 7.94 சதவீதமாக இருந்தது பின்னர் வாங்குவது அதிகரித்ததன் காரணமாக 8 சதவீதமாக உயர்ந்தது. ஆனால் தரகர்களின் எதிர்பார்ப்போ 7.90 சதவீதம்தான்.
கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி ரிசர்வ் வங்கி ரூ. 2,700 கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களை பொது ஏல விற்பனை மூலம் திரும்ப வாங்கியுள்ளது.
மொத்தம் ரூ. 6,000 கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களை வாங்குவதென முன்னர் தீர்மானித்திருந்தது.

நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate::?::(
:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.
 

உள்நுழைய

  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    REGISTER_REQUIRED