இன்றைய காலக்கட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து மற்ற நாடுகளுக்கு பேச குறைந்தவிலையில் VOIP எனப்படும் சேவை பரவலாக பயன்பட்டுவருகிறது. தற்போது அச்சேவையை நம்நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்குவதால் ் இன்டர்நெட் தொலைபேசி சேவையை (VOIP)தடை செய்ய வேண்டும் என உளவுத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஐ.எஸ்.டி. கட்டணம் அதிகம் என்பதால் பிபீஓ, சாப்ட்வேர் நிறுவனங்கள் என பலர் வி.ஓ.ஐ.பி. எனப்படும் இன்டர்நெட் வழி தொலைபேசி சேவையின் மூலம் குறைந்தகட்டணத்தில் பயன்படுத்திவருகின்றனர். ஆனால், இச்சேவையை பயன்படுத்தி பேசும்போது அவற்றினை வழிமறித்து கேட்கும் வசதி நம் நாட்டில் இல்லை.சமீபத்தில் மும்பை தாக்குதலை தீவிரவாதிகள், இன்டர்நெட் தொலைபேசி உரையாடல் மூலம், தகவலை பரிமாறிக் கொண்டு தாக்குதலை நடத்தி முடித்துள்ளனர்.
இன்டர்நெட் தொலைபேசி மூலம் பேசுபவர்களை அடையாளம் காணவும் முடியாது. எனவே நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என தொலைத் தொடர்பு துறையிடம், உளவுத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!








kalakunga - yaska - indha article or...
Very Interesting & so many unknown de...
hi read this