Sunday
Feb 05th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

இன்சூரன்ஸ்

குழந்தைகளுக்கு புதிய காப்பீட்டு திட்டம் : ஜடிபீஜ வங்கி

குழந்தைகளுக்கு புதிய காப்பீட்டு திட்டம் : ஜடிபீஜ வங்கி
ஒரு மாத குழந்தை முதல் 17 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான சைல்ட்சூரன்ஸ்  என்னும் புதிய காப்பீட்டு திட்டத்தை ஜடிபீஜ  வங்கி  அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து வங்கியின் நிர்வாக இயக்குனர் கூறியதாவது:
அதிகரித்து வரும்  கல்வி செலவுகளை சமாளிக்கும் வகையில் இணை ஆயுள் காப்பீடு, உத்தரவாத லாயல்டி, கல்வி ஆதரவு பலன், எதிர்கால பிரீமியத்துக்கு ரொக்கத் தொகை, கல்வி ஆதரவு பலன் முதலிய பலன்களை இப்பாலிசி கொண்டுள்ளது.  ஆண்டு பிரீமியம் ரூ.25,000 முதல் ரூ.1 இலட்சம் வரையிலும் நிர்ணயிக்கப்பட்டு  10 முதல் 25 ஆண்டுகளுக்கு இடையிலான காப்பீட்டு காலத்தை தேர்ந்தெடுக்கலாம் என்றார்.
ஒரு மாத குழந்தை முதல் 17 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான சைல்ட்சூரன்ஸ்  என்னும் புதிய காப்பீட்டு திட்டத்தை ஜடிபீஜ  வங்கி  அறிமுகப்படுத்தியுள்ளது.
Read more...

புது வருடத்தில் கல்யாண காப்பீட்டு : ஜசிஜசிஜ

புது வருடத்தில் கல்யாண காப்பீட்டு : ஜசிஜசிஜ
நிச்சயிக்கப்பட்ட திருமணம் பல்வேறு காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டாலோஒ, நிறுத்தப்பட்டாலோ இழப்பீடு தர தனியார் வங்கிகளான ஜசிஜசிஜ, பஜாஜ் அலையன்ஸ்  ஆகியவை கல்யாண காப்பீட்டை அறிமுகம் செய்துள்ளன.
பலமடங்கி அதிகரித்துவிட்ட திருமண செலவுகளை கருத்தில் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள இக்காப்பீட்டுத் திட்டப்படி ரூ.4,000 முதல் ரூ.15,000 பிரீமியம் செலுத்த வேண்டும்.
தீ விபத்து, இயற்கை சீற்றங்கள், மணமகள்/மகன் வாகன விபத்து, சத்திரத்தில் கொள்ளை என திருமணா தேதியை ஒட்டி ஒரு வாரத்திற்குள் நேரிட்டால் ரூ.2 இலட்சம் முதல் ரூ. 8 இலட்சம் வரை இழப்பீடு கிடைக்கும்.
நிச்சயிக்கப்பட்ட திருமணம் பல்வேறு காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டாலோ,நிறுத்தப்பட்டாலோ இழப்பீடு தர தனியார் வங்கிகளான ஜசிஜசிஜ, பஜாஜ் அலையன்ஸ்  ஆகியவை கல்யாண காப்பீட்டை அறிமுகம் செய்துள்ளன.
Read more...

புதிய உத்தரவாத முதிர்வு காப்பீட்டு திட்டம் : பஜாஜ அலையன்ஸ்

புதிய உத்தரவாத முதிர்வு காப்பீட்டு திட்டம் : பஜாஜ அலையன்ஸ்
காப்பீட்டு நிறுவனங்களுள் ஒன்றான பஜாஜ் அலையன்ஸ் நிறுவனம் புதிய உத்தரவாத முதிர்வு காப்பீட்டு திட்டத்தை பங்குச் சந்தையுடன் இணைந்து வெளியிட்டுள்ளது.
கிராமம், சிறு நகரம் உள்ளிட்ட அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களும் அவர்கள் வருவாய்க்கு ஏற்ப யூலீப் காப்பீட்டு திட்டத்தில் இணைய குறைந்தபட்ச பிரீமியம் ரூ.5,000 கொண்டு யூலிப் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஜந்தாண்டுகளுக்கு பிறகு காப்பீட்டுத் தொகையை திரும்பப் பெற்றுக் கொள்ளும் இத்திட்டத்திற்கு பத்தாண்டு காலம் முதிர்வு காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திட்ட முடிவில் 200% அதாவது இருமடங்கு இலாபத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
காப்பீட்டு நிறுவனங்களுள் ஒன்றான பஜாஜ் அலையன்ஸ் நிறுவனம் புதிய உத்தரவாத முதிர்வு காப்பீட்டு திட்டத்தை பங்குச் சந்தையுடன் இணைந்து வெளியிட்டுள்ளது.
Read more...

ஓராண்டு கெடுவில் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் பங்கு வெளியீடு

ஓராண்டு கெடுவில் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் பங்கு வெளியீடு
இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் , ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் தொடங்கி பத்து ஆண்டுகளுக்கு மேல் இருந்தால் அந்நிறுவனம் ஓராண்டுக்குள் பங்கு வெளியிட வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது.
புதிய தனியார் வங்கிகளுக்கு வங்கி தொடங்கி பத்து வருடங்களுக்கு மேல் ஆனால் பங்கு வெளியிட வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்தது. அதே போல்ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் தொடங்கி பத்து ஆண்டுகள் முடிந்துவிட்டால் அடுத்த ஆறு முதல் 9 மாதங்களில் புதிய பங்குகளை வெளியிட வேண்டியது அவசியம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் வர்த்தக வளர்ச்சி பெற்ற நிறுவனத்தின் நிர்வாக உரிமையை பரவலாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் , ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் தொடங்கி பத்து ஆண்டுகளுக்கு மேல் இருந்தால் அந்நிறுவனம் ஓராண்டுக்குள் பங்கு வெளியிட வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது.

Last Updated ( Tuesday, 06 December 2011 20:44 )

Read more...

வங்கிகள் மூலம் தனியார் மருத்துவ இன்சூரன்ஸ்களை விற்க அனுமதி

வங்கிகள் மூலம் தனியார் மருத்துவ இன்சூரன்ஸ்களை விற்க அனுமதி
வங்கிகளின் இன்சூரன்ஸ் திட்டங்களில் மட்டுமின்றி மற்ற மருத்துவ இன்சூரன்ஸ் திட்டங்களிலும்
வங்கி மூலமாக சேர வாடிக்கையாளர்களுக்கு வகை செய்யப்பட்டு ஜஆர்டிஏ விதிமுறை மாற்றம் செய்துள்ளது.
தற்போதுள்ள விதிமுறையின்படி வங்கியானது ஒரு ஆயுள் காப்பீடு மற்றும் ஒரு பொது காப்பீட்டு நிறுவனத்துடன்
மட்டுமே கூட்டு சேர முடியும்.  அஹ்டிக வருவாய் கிடைக்கக் கூடிய விபத்து காப்பீடு போன்ற காப்பீட்டு திட்டங்களில்
மட்டுமே  வங்கிகள் ஆர்வம் காட்டுகின்றன. திருத்தப்பட்ட காப்பீட்டு முறைப்படி மருத்துவ காப்பீட்டில் விருப்பமானதை வாடிக்கையாளர்
தேர்வு செய்து சேர வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டப்படி, மேக்ஸ் பூபா, அப்போலோ மினிச்,ஸ்டார் ஹெல்த் போன்ற முன்னணி தனியார் மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களின் திட்டங்களும் இனி
வங்கிகளால் விற்கப்படும்.
வங்கிகளின் இன்சூரன்ஸ் திட்டங்களில் மட்டுமின்றி மற்ற மருத்துவ இன்சூரன்ஸ் திட்டங்களிலும் வங்கி மூலமாக சேர வாடிக்கையாளர்களுக்கு வகை செய்யப்பட்டு ஜஆர்டிஏ விதிமுறை மாற்றம் செய்துள்ளது.
Read more...

"லைப்சூரன்ஸ் சேவிங்ஸ் இன்சூரன்ஸ் பிளான் : பெடரல் ஆயுள் காப்பீட்டு நிறுவனம்

"லைப்சூரன்ஸ் சேவிங்ஸ் இன்சூரன்ஸ் பிளான் : பெடரல் ஆயுள் காப்பீட்டு நிறுவனம்
ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களுள் ஒன்றான பெடரல் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் வாடிக்கையாளர்களாஇக் கவர  "லைப்சூரன்ஸ் சேவிங்ஸ் இன்சூரன்ஸ் பிளான் என்னும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
"லைப்சூரன்ஸ் சேவிங்ஸ் இன்சூரன்ஸ் பிளான்' மூலம்  காப்பீடுதாரர்களுக்கு வருமான வரிச் சட்டம் 80 சி பிரிவின் கீழ், வரிச்சலுகை பெற வகை செய்யப்பட்டுள்ளது.ஊக்கத் தொகைகள், உத்தரவாத சேர்ப்புகள், ஆயுள் காப்பீடு ஆகிய முத்தரப்பு பயன்களை ஒருங்கே கொண்ட இத்திட்டத்திற்கு குறைந்தபட்ச பிரிமியம், 20 ஆயிரம் ரூபாய். மாதம் 2,500 ரூபாய் வீதம், சுலப தவணைகளில் பிரிமியம் செலுத்தும் வசதியும் உண்டு. இக்காப்பீட்டு திட்டத்தில் சேரும் பெண்களுக்கு, ஒரு கூடுதல் பிரிமிய தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ், 10, 15, 20 மற்றும் 25 ஆண்டு காலத்திற்கு காப்பீடு செய்து கொள்ளலாம்.
ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களுள் ஒன்றான பெடரல் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் வாடிக்கையாளர்களைக் கவர  "லைப்சூரன்ஸ் சேவிங்ஸ் இன்சூரன்ஸ் பிளான் என்னும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Last Updated ( Thursday, 01 December 2011 18:14 )

Read more...

காப்பீட்டு வசதி வழங்கும் பெடரல் வங்கி

காப்பீட்டு வசதி வழங்கும் பெடரல் வங்கி
பெடரல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கும் விதமாக நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து காப்பீட்டு திட்டங்களை வழங்க முடிவு செய்துள்ளது.
பெடரல் அஷ்யூரன்ஸ் திட்டப்படி பெடரல் வங்கி சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்களுக்கு விபத்து காப்பீடு வழங்கப்படும்.ஒராண்டுக்கு அமலில் இருக்கும் இக்காப்பீடு, அதன் பிறகு விதிமுறைகளுக்கு உட்பட்டு புதுப்பிக்கப்படும்.இதுதவிர, இயற்கை சீற்றங்கள், தீ, திருட்டு ஆகியவற்றால் ஏற்படும் இழப்பிற்கும் காப்பீடு வழங்கப்படும்.
பெடரல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கும் விதமாக நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து காப்பீட்டு திட்டங்களை வழங்க முடிவு செய்துள்ளது.
Read more...

நடப்பு நிதியாண்டில் ரூ.2 இலட்சம் கோடி முதலீடு : எல்ஜசி

நடப்பு நிதியாண்டில் ரூ.2 இலடம் கோடி முதலீடு : எல்ஜசி
2011&12ம் நிதியாண்டில் எல்ஜசி பங்குச் சந்தையில் ரூ.2 இலட்சம் கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்திய சட்டப்படி ஒவ்வொரு காப்பீட்டு நிறுவனமும் 50% முதலீடு செய்யலாம். அதன்படி நாட்டின் மிகப் பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஜசி ரூ.2 இலட்சம் கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
இது குறித்து எல்ஜசியின் மேலாண்மை இயக்குனர் தாமஸ் கூறுகையில்,
பங்கு சந்தையில் கடந்த நிதியாண்டில் ரூ.40,000 கோடி முதலீடு செய்தோம்.அதைத் தொடர்ந்து நடப்பு நிதியாண்டில் எல்ஜசி மொத்தமாக ரூ.2 இலட்சம் கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
2011&12ம் நிதியாண்டில் எல்ஜசி பங்குச் சந்தையில் ரூ.2 இலட்சம் கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

Last Updated ( Monday, 17 October 2011 16:04 )

Read more...

எல்ஜசியின் ஜீவன் ஆரோக்யா

எல்ஜசியின் ஜீவன் ஆரோக்யா
நாட்டின் மிகப் பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஜசி வாடிக்கையாளர்களுக்கு ஜீவன் ஆரோக்யா என்னும் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இத்த்ட்டத்தில் சேருபவரின் குடும்பத்திலுள்ள அனைவரும் பயன் பெறும் வகையில் காப்பீடு எடுக்கமுடியும். காப்பீடு எடுப்பவரின் மனைவி அல்லது கணவ்னின் பெற்றோரையும் இதில் சேர்த்துக் கொள்ள முடியும்.இதில் சேர குறந்தபட்ச வயது 18 ஆகவும்,அதிகபட்ச மாக 65 வயதும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.ஒரு குறிப்பிட்ட நபரை சேர்க்கவோ அல்லது நீக்கவோ பாலிசி காலத்தில் செய்ய முடியும். காப்பீடு ச்ய்பவரின் வயது,பாலினம், மற்றும் காப்பீடு பெற விரும்பும் மருத்துவ காப்பீடு ஆகியவற்றை பொறுத்து பிரீமீய தொகையை அரையாண்டு,காலாண்டு,ஆண்டுக்கொரு முறை, மாதாந்திர அடிப்படையில் செலுத்தலாம்.
நாட்டின் மிகப் பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஜசி வாடிக்கையாளர்களுக்கு ஜீவன் ஆரோக்யா என்னும் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
Read more...

இந்திய இன்சூரன்ஸ் துறையில் முதலீடு : வாரன் பப்பெட்

இந்திய இன்சூரன்ஸ் துறையில் முதலீடு : வாரன் பப்பெட்
உலக் மெகா கோடீஸ்வரர்களில் ஒருவரும், அமெரிக்க பங்குச் சந்தை முதலீட்டாளருமான வாரன் பப்பெட் மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
இந்தியாவில் இன்சூரன்ஸ் தொழிலுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தவும், அறக்கொடை நிறுவனங்களை ஊக்குவிப்பதும் வாரன் பப்பெட்டின் நோக்கம்.
இந்திய அரசு பெரும் முயற்சி எடுத்து காப்பீட்டு துறையில் 26% வரை வெளிநாட்டு முதலீடுகளை காப்பீட்டு துறையில் அனுமதிக்கிறது.
பப்பெட்டின் பெர்ஷயர் நிறுவனம் பஜாஜ் நிறுவனத்துடன் சேர்ந்து ஆயுள் காப்பீடு அல்லாத காப்பீட்டு திட்டங்களை விற்க திட்டமிட்டுள்ளது. ஏஜெண்டுகள் யாருமில்லாமல் இணையத்தில் காப்பீட்டுத் திட்டத்தில் இணையலாம்.
உலக் மெகா கோடீஸ்வரர்களில் ஒருவரும், அமெரிக்க பங்குச் சந்தை முதலீட்டாளருமான வாரன் பப்பெட் மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
Read more...
 

இரு புதிய காப்பீட்டு திட்டங்கள் : பாரதி ஆக்சா

இரு புதிய காப்பீட்டு திட்டங்கள் : பாரதி ஆக்சா
இன்சூரன்ஸ் துறையில் குறிபிட்ட தகுந்த நிறுவனமான பாரதி ஆக்சா லைப் இன்சூரன்ஸ் குழந்தைகள் மற்றும் ஒய்வு கால திட்டங்களுக்காக இரு புதிய காப்பீட்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
குழந்தைகளின் எதிர்கால படிப்பு மற்றும் திருமண செலவுகளை கருத்தில் கொண்டு பிரைட் ஸ்டார்ஸ் பவர் பிளஸ் என்ற திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
பெற்றோருக்கு எதிர்பாராத சம்பவம் நிகழும் போது, பிரீமியம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளீப்பதுடன் முதிர்வு காலத்தில் முழு காப்பீட்டுத் தொகையும் குழந்தைக்கு வழங்கப்படும்.மேலும் ஆண்டுதோறூம் வருமானத்தையும் வழங்கும்.
உய்வு பெறுவர்களுக்கான லைப் ஒண்டர் இயர்ஸ் திட்டப்படி ஒய்வு பெறும் போது 3ல் ஒரு பங்கு தொகையை திரும்பப் பெறலாம். இதற்கு வரி விலக்கு அளிக்கப்படும். மீதியுள்ள தொகையை மாதாந்திர அடிப்படையில் ஒய்வூதியமாக பெறலாம். மொத்த பிரீமிய தொகையில் 108% காப்பீடு வழங்கப்படும்.
இன்சூரன்ஸ் துறையில் குறிபிட்ட தகுந்த நிறுவனமான பாரதி ஆக்சா லைப் இன்சூரன்ஸ் குழந்தைகள் மற்றும் ஒய்வு கால திட்டங்களுக்காக இரு புதிய காப்பீட்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
Read more...

ரிலையன்ஸ் லைப்பில் $724 மில்லியன் முதலீடு செய்யும் நிப்பான் லைப்

ஜப்பான் இன்சூரன்ஸ் திட்டங்களை வெளிநாடுகளில் நடைமுறைப்படுத்தும் வகையில் 26% ரிலையன்ஸ் லைப் பங்குகளை நிப்பான் லைப் இன்சூரன்ஸ் வாங்கியுள்ளது.

ஜப்பானின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமாம நிப்பான் , இந்தியாவின் முக்கிய லைப் இன்சூரன்ஸ் நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனத்தில் $724 மில்லியன் (60 பில்லியன் யென் )மதிப்பில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
நிப்பான் லைப் மற்றும் ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனங்களை நிர்வகித்து வரும் அனில் அம்பானி இதுக் குறித்து கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
இதுக் குறித்து சந்தை ஆய்வாளர் சந்தோஷ் சிங் கூறுகையில், 42.5 பில்லியன் மதிப்புள்ள லைப் இன்சூரன்ஸ் சந்தையில் நிப்பான் செய்யும் முதலீடு குறைந்த முதலீடே ஆகும்.ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு ஜப்பானியர்களின் வேலைத் திறமை மூலம் இலாபமே.
Read more...

2010 & 11 -ல் எல்ஜசி பிரீமியம் 37% வளர்ச்சி

2010 & 11 -ல் எல்ஜசி பிரீமியம் 37% வளர்ச்சி
நாட்டின் மிகப் பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஜசி , கடந்த டிசம்பருடன் முடிந்த காலத்தில் புதிய பிஸினஸ் பிரீமியத்தில் ரூ.67,135.32 கோடி திரட்டியுள்ளது.
நாடு முழுவதும் 23 லைப் இன்சூரன்ஸ் ஏஜெண்ட்கள் புதிய வாடிக்கையாளர்கள் மூலம் ரூ.95,000 கோடி திரட்டி 26% வளர்ச்சியை தந்துள்ளனர்.
தனியார் லைப் இன்சூரன்ஸ் திட்டங்களில் எஸ்பிஜ 9% வளர்ச்சியும், ரிலையன்ஸ் 10% நஷ்டத்தையும்,ஜசிஜசிஜ லைப் ரூ.5,130.23 கோடி வளர்ச்சியும் கண்டுள்ளது.
லைப் இன்சூரன்ஸ்  இல்லாத மற்ற இன்சூரன்ஸ் துறையின் மொத்த வருவாய் ரூ.14,394.69 கோடியுடன் 24.57% வளர்ச்சி கண்டுள்ளது. இதில் 70% பப்ளிக் செக்டார் யூனிட்கள் மூலம் திரட்டப்பட்டுள்ளது.
நாட்டின் மிகப் பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஜசி , கடந்த டிசம்பருடன் முடிந்த காலத்தில் புதிய பிஸினஸ் பிரீமியத்தில் ரூ.67,135.32 கோடி திரட்டியுள்ளது. நாடு முழுவதும் 23 லைப் இன்சூரன்ஸ் ஏஜெண்ட்கள் புதிய வாடிக்கையாளர்கள் மூலம் ரூ.95,000 கோடி திரட்டி 26% வளர்ச்சியை தந்துள்ளனர்.

Last Updated ( Monday, 07 March 2011 17:09 )

Read more...

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் ரூ. 6,000 கோடி இலக்கு!

இந்தியாவின் முன்னணி இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ஒன்றான 'யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் நடப்பு நதியாண்டில் 6,000 கோடி ரூபாய் பிரீமியம் தொகையை இலக்காக கொண்டுள்ளது என, அந்நிறுவனத்தின் தலைவர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

Last Updated ( Saturday, 15 January 2011 18:16 )

Read more...
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  4 
  •  5 
  •  Next 
  •  End 
  • »
Page 1 of 5

உள்நுழைய

  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    REGISTER_REQUIRED