இந்தியாவின் முன்னணி இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ஒன்றான 'யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் நடப்பு நதியாண்டில் 6,000 கோடி ரூபாய் பிரீமியம் தொகையை இலக்காக கொண்டுள்ளது என, அந்நிறுவனத்தின் தலைவர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
'வாழ்ந்து காட்டுவோம்' என்ற திட்டத்த்தின் மூலம் கிராமப்புற பெண்கள் வாழ்வை முன்னேற்ற முயற்சி செய்துவருகிறோம்.மேலும் இத்திட்டத்தினை நாட்டில் 50 கிராமங்களில் இத்திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்.
இத்திட்டத்திற்காக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலுள்ள பைரமங்களம் கிராமத்தை இத்திட்டத்தின் கீழ் தத்தெடுத்துள்ளோம். கார்ப்பரேஷன் வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம். நடுத்தர மக்களுக்கு உதவும் வகையில் நிறுவனத்தின்
எங்களின் ஏஜென்சி எண்ணிக்கையை தற்போதுள்ள 23 ஆயிரத்திலிருந்து, 37ஆயிரமாக உயர்த்தியுள்ளதோடு நடப்பு நதியாண்டில் 6,000 கோடி ரூபாய் பிரீமியம் தொகையை இலக்காக கொண்டு செயல்படுகிறோம்,
என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!





