இலவச போன் வசதியைப் பயன்படுத்தி அழைத்தால், கட்டணமின்றி டாக்டர் ஆலோசனையைப் பெறும் வசதியை ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் இன்சூரன்ஸ் துறையில் இதுபோன்ற வசதி அளிக்கப்படுவது இதுவே முதல்முறை. இதுபற்றி சென்னையில் நிருபர்களிடம் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவன தலைவர் ஜெகந்நாதன் நேற்று கூறியதாவது:
இலவச கால்சென்டர் எண்ணில் (டோல் ப்ரீ நம்பர்) டாக்டரின் ஆலோசனையை 24 மணி நேரமும் இலவசமாக பெறும் வசதி அறிமுகமாகி உள்ளது.
1800 425 2255 என்ற எண்ணுக்கு போன் செய்யலாம். திடீர் உடல்நலக் குறைவு, சிறிய பிரச்னைகள் ஆகியவற்றால் டென்ஷன், அச்சம் கொள்வதைத் தவிர்த்து, இலவசமாக ஆலோசனை பெற்று நிம்மதி பெறலாம். தேவைப்பட்டால் மருந்துகளும் பரிந்துரை செய்யப்படும்.
இந்த சேவை, ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் வாடிக்கையாளர்களுக்காக என்ற போதிலும், இன்சூரன்ஸ் பாலிசி எண்ணை தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் டாக்டர்கள் பதில் அளிப்பார்கள். கிராமப்புற, ஏழை, எளிய மக்கள் பயன்- பெற முடியும் என்றார்.

நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!