துணி பார்சல்களை தாமதமாக டெலிவரி செய்த ஸ்ரீலங்கன் டிராவல்ஸ் நிறுவனம், பாதிக்கப்பட்ட டெக்ஸ்டைல் நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு தர வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூரின் சுபஸ்ரீ டெக்ஸ்டைல் 120 அட்டைப் பெட்டிகளில் துணி வகைகளை கனடா நாட்டுக்கு அனுப்பி வைத்தது. இவை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ஸ்ரீலங்கன் கார்கோ டிராவல்ஸ் மூலம் 2002ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி கனடாவுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த பார்சல் ஏப்ரல் 3ம் தேதி டெலிவரி செய்யப்பட்டதாக டிராவல்ஸ் நிறுவனம் தெரிவித்தன.
ஆனால் கனடாவுக்கு தாமதமாக 15ம் தேதிதான் சென்றடைந்துள்ளது. இதற்காக கனடா நிறுவனம், சுபஸ்ரீ டெக்ஸ்டைலிடம் இருந்து லேட்டாக டெலிவரி செய்ததற்காக ரூ.2.39 லட்சத்தை அபராதம் பெற்றனர். டிராவல்ஸ் நிறுவனம் தாமதமாக டெலிவரி செய்ததை எதிர்த்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த குறைதீர் நீதிமன்ற தலைவர் ரோசய்யா, உறுப்பினர் மல்லிகா ஆகியோர் இரு டிராவல்ஸ் நிறுவனங்களும் இணைந்து ரூ.10 லட்சத்து 30 ஆயிரத்து 145 தர வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!