Sunday
Feb 05th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஏஜெண்ட்களுக்கு கமிஷன் இல்லை!

E-mail Print PDF
வரும் 2011ம் ஆண்டு முதல் இன்சூரன்ஸ் ஏஜன்ட்களுக்கான கமிஷன் தொகையை ரத்து செய்ய மத்திய அரசின் முதலீட்டாளர் பாதுகாப்பு ஆய்வுக்குழுவின் வரைவு அறிக்கை கூறியுள்ளது.. முதலீட்டாளர் பாதுகாப்பு குறித்த விஷயங்களை ஆராய்வதற்காக சுவரூப் தலைமையில் அமைக்கப்பட்ட 6 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்தக் குழு தன்னுடைய இறுதி அறிக்கையை இந்த மாத கடைசியில் அரசிடம் சமர்ப்பிக்க உள்ளது.

இக்குழு வெளியிட்டுள்ள வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வரும் 2011ம் ஆண்டு ஏப்ரலுக்குள் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஏஜன்ட்களுக்கு அளிக்கும் கமிஷன் தொகையை முற்றிலுமாக நீக்க வேண்டும். இப்போது பாலிசிதாரர்கள் சேர்க்கப்பட்டவுடன் அளிக்கப்படும் 16.25 சதவீதம் கமிஷன் தொகையை 15 சதவீதமாக குறைக்க வேண்டும். அடுத்த ஆண்டில் கமிஷன் தொகையை 7 சதவீதமாக குறைக்க வேண்டும். 2011ம் ஆண்டு முதல் இன்சூரன்ஸ் ஏஜன்ட்களுக்கான கமிஷன் தொகையை ரத்து செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே ஏஜன்டு களால் பாலிசிதாரர்கள் பாதிக்கப்படாமல் இருக்க இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் பல்வேறு விதிகளை வெளியிட்டுள் ளது. இதன்படி, ஒரு நிறுவன ஏஜன்ட் 3 ஆண்டுகள் வரையில் வேறு எந்த நிறுவனத்திலும் சேர முடியாத வகையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.

நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate::?::(
:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.
 

உள்நுழைய

  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    REGISTER_REQUIRED