மருத்துவ காப்பீடு செய்தவருக்கு கிளைம் அளிக்க மறுத்த யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.22,000 இழப்பீடு வழங்க நுகர்வோர் அமைப்பு உத்தரவிட்டுள்ளது. அகமதாபாத்தைச் சேர்ந்தவர் ரஞ்சன்பென் சோனி. யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மருத்துவ காப்பீடு பாலிசியில் சேர்ந்தார். ரூ.50,000 மதிப்புள்ள பாலிசிக்காக ரூ.1,564 பிரீமியம் செலுத்தினார்.
அவரது பாலிசி காலக்கெடு 2003 மார்ச் 30 வரை இருந்தது. 2002 பிப்ரவரி 27 முதல் மார்ச் 2ம் தேதி வரை சிறுநீரக நோய்த் தொற்றுக்காக அகமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதற்காக செலவிட்ட ரூ.5,173ஐ அளிக்குமாறு யுனைடெட் இந்தியாவிடம் விண்ணப்பித் தார்.
அதை அளிக்க மறுத்த நிறுவனம், ரஞ்சன்பென்னுக்கு அந்நோய் ஏற்கனவே இருந்ததாக காரணம் கூறியது. இல்லை என்று அவர் மறுத்தும் அதை ஏற்கவில்லை. இதற்கிடையே மே 3ம் தேதி இதய வலி காரணமாக மருத்துவமனையில் சேர்ந்தார் ரஞ்சன்பென். 9ம் தேதி டிஸ்சார்ஜ் ஆன அவர், மருத்துவத்துக்கு செலவிட்ட ரூ.16,708ஐ அளிக்குமாறு இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் விண்ணப்பித்தார்.
இந்த முறையும் நோய் ஏற்கனவே இருந்ததாக காரணம் கூறி நிராகரித்தது. இதையடுத்து, அகமதாபாத் நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பு மூலம் நுகர்வோர் பிரச்னை குறைதீர்ப்பு அமைப்பில் வழக்கு தொடர்ந்தார் ரஞ்சன்பென். கடந்த ஆண்டு மார்ச் 16ம் தேதி அவர் காலமானதால் வழக்கை அவரது கணவர் வினய்சந்திரா தொடர்ந்தார். ரஞ்சன்பென் சிகிச்சை பெற்ற 2 நோய்களும் அவருக்கு ஏற்கனவே இருந்தவை என டாக்டர் கூறியதாக யுனைடெட் இந்தியா தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், அதற்கான எழுத்துப்பூர்வ ஆதாரத்தைக் காட்ட தவறி விட்டது.
இதையடுத்து, நுகர்வோர் அமைப்பு அளித்த தீர்ப்பில், டாக்டரின் வாய்மொழி கருத்தை ஏற்க முடியாது. எனவே, ரஞ்சன்பென் மருத்துவ செலவான ரூ.21,881ஐ அவரது கணவரிடம் 8 வாரங்களுக்குள் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!