Saturday
Jul 31st
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சிகிச்சையில் அலட்சியம் : நுகர்வோர் கமிஷன் அதிரடி

E-mail Print PDF
புதுடெல்லி: தவறான சிகிச்சையால் பலியான நோயாளியின் குடும்பத்துக்கு தனியார் மருத்துவமனை, டாக்டர் இணைந்து ரூ.12.15 லட்சம் இழப்பீடு அளிக்க தேசிய நுகர்வோர் கமிஷன் உத்தரவிட்டது.
டெல்லியைச் சேர்ந்த ராஜிவ் சர்மா. இவர் கடந்த 1999ல் பிரசவத்துக்காக தனது மனைவியை ஹெல்வீடியா கிளினிக்கில் சேர்த்திருந்தார். சிசேரியன் பிரவசத்தின்போது ராஜிவின் மனைவி இறந்தார்.
மருத்துவ சேவையில் அலட்சியம் காட்டியதாக மருத்துவமனை, டாக்டர்கள் மீது டெல்லி தேசிய நுகர்வோர் கமிஷனில் ராஜிவ் வழக்கு தொடர்ந்தார்.
நுகர்வோர் கமிஷன் உறுப்பினர் குப்தா, ராஜலட்சுமி ராவ் ஆகியோர் வழக்கை விசாரித்தனர். நோயாளிக்கு மயக்க மருந்தளித்த டாக்டர், மருந்தை அதிகமாக கொடுத்தது விசாரணையில் தெரிந்தது. அத்துடன், பொது மயக்க மருந்து அளிக்கும் முன், நோயாளியின் உடல்நிலை வரலாறையும் அவர் ஆராயவில்லை என்று நிரூபணமானது.
இதையடுத்து நுகர்வோர் கமிஷன் நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், பலியான நோயாளியின் கணவர், இரண்டு குழந்தைகளுக்கு இழப்பீடாக தனியார் மருத்துவமனை ரூ.10 லட்சமும், சிகிச்சை அளித்த டாக்டர்கள் ரூ.2.15 லட்சமும் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!
Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate::?::(
:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.
 
Banner

எங்கள் செய்திச்சேவையைபெற


1
விஷூவல் மீடியா

ட்விட்டரில் தொடர

உள்நுழைய

  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    REGISTER_REQUIRED