Sunday
Feb 05th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சுத்தம் செய்யப்படாத கருவிகளால் ஆபரேஷன் : நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

E-mail Print PDF

மும்பை, : சுத்தம் செய்யப்படாத கருவிகளால் கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால், 2 பேர் பார்வை இழந்தனர். அவர்களுக்கு தலா ரூ.6 லட்சம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

மும்பையில் லீலாவதி மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவர் விஜய் பிரதான் (78) என்பவரும், பரேக் (76) என்பவரும் கடந்த 2000ம் ஆண்டில் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டனர். இருவருமே பின்னர் பார்வை இழந்தனர்.

இதுதொடர்பாக பரேக் 2001லிலும், விஜய் பிரதான் 2002லிலும் மருத்துவமனை மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நடுவர்கள் தங்களது தீர்ப்பில் கூறியதாவது:

மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அறை சுத்தமாக பராமரிக்கப்படாததும், கருவிகள் சுத்தம் செய்யப்படாமலேயே அடுத்தவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. டாக்டரும் மருத்துவமனை நிர்வாகமும் அஜாக்கிரதையாக செயல்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மருத்துவமனை நிர்வாகம் அறுவை சிகிச்சையால் பார்வை இழந்த இருவருக்கும் தலா ரூ.5 லட்சம் நஷ்ட ஈடு தரவேண்டும். அஜாக்கிரதையாக நடந்து கொண்ட டாக்டர் நிதின் பரேக், இவர்கள் இருவருக்கும் தலா ரூ.1 லட்சம் நஷ்டஈடு தரவேண்டும்.

நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate::?::(
:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.
 

உள்நுழைய

  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    REGISTER_REQUIRED