இந்தியாவின் பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் மருத்துவ காப்பீட்டு பிரிமிய வருவாய் சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது. சென்ற 2009-10-ஆம் நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இது 20 சதவீதம் அதிகரித்து ரூ.4,952 கோடியிலிருந்து ரூ.5,982 கோடியாக உயர்ந்துள்ளது. அதேசமயம், மொத்த பிரிமிய வருவாய் 10 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது.
சென்ற 2009-10-ஆம் முழு நிதி ஆண்டில், மருத்துவ காப்பீட்டு பிரிமிய வருவாய் ரூ.9,000 கோடியைத் தாண்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்த பிரிமிய வருவாயில் இதன் பங்களிப்பு 25 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று இத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
நடப்பு நிதி ஆண்டில் மருத்துவ காப்பீட்டு துறையின் பிரிமிய வருவாய் 25 சதவீதம் அதிகரிக்கும் என்று ஐ.சி.ஐ.சி.ஐ. லோம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பார்கவ் தாஸ்குப்தா தெரிவித்தார்.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!





