Sunday
Feb 05th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தொழில்நுட்பம்

பெங்களூர் நிறுவனத்தின் புதிய டேப்லஸ் ரியோ டேபுலேட்

பெங்களூர் சார்ந்த பிரபல நிறுவனமான டிஜிட்டல் வேவுஸ் அதன் புதிய தயாரிப்பான "டேப்லஸ் ரியோ" டேபுலேட்டை இந்திய சந்தையில் வெளியிடுகின்றது. இதன் மதிப்பு சுமார் ரூபாய்  11,990 ஆகா இருக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Read more...
 

உள்ளங்கையில் கணினி - C PAD வெளியீடு

உள்ளங்கையில் கணினி - C PAD வெளியீடு
இந்தியாவின் முன்னணி இணையத்தள சேவை நிறுவனம் விசுவல்மீடியா டெக்னாலஜிஸ். கிருஷ்ணகிரியைத் தலைமையிடமாகக் கொண்டு அது செயல்பட்டு வருகிறது. மென்பொருள் உருவாக்கம்(Software Development), இணையத் தள வடிவமைப்பு (Website Design) உள்ளிட்ட பல்வேறு தரமான சேவைகளை, கட்டுபடியாகும் விலையில் வழங்கி வருகிறது எம் நிறுவனம்.

Last Updated ( Saturday, 07 January 2012 17:35 )

Read more...

சென்னையில் ஏர்செல் 3G அறிமுகம்

வாடிக்கையாளார்களுக்கு  3 ஜி சேவை - ஏர்செல்
இந்தியாவின் ஜந்தாவது பெரிய மொபைல் சேவை நிறுவனமான ஏர்செல் புதிய 3 ஜி சேவையை வாடிக்கையாளர்களுக்கு சென்னையில் அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து ஏர்செல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி குர்தீப் சிங் கூறுகையில்,
2010 ஆம் ஆண்டில் எங்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஜந்து கோடியை தாண்டியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சிறப்பாக சேவை வழங்கும் வகையில் எங்களின் அடுத்த முயற்சியாக 3 ஜி சேவையை வழங்குகிறோம். எர்செல் 3 ஜி பக்கெட் இணையம் வாடிக்கையாளர்களுக்கு பேஷன்,இசை,சினிமா, விளையாட்டு என அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளாது. தற்போது 22 தொலைத் தொடர்பு வட்டங்களில் செய்லபடும் ஏர்செல் 13 வட்டங்களில் 3 ஜி சேவையை வழங்க உள்ளது.
இந்தியாவின் ஜந்தாவது பெரிய மொபைல் சேவை நிறுவனமான ஏர்செல் புதிய 3 ஜி சேவையை வாடிக்கையாளர்களுக்கு சென்னையில் அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து ஏர்செல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி குர்தீப் சிங் கூறுகையில்,2010 ஆம் ஆண்டில் எங்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஜந்து கோடியை தாண்டியுள்ளது.

Last Updated ( Wednesday, 23 February 2011 17:06 )

Read more...

கோடிகளை கடந்து லட்சங்கள், ஏழைகளுக்கு தெருக்கோடிகளும் ?

கோடிகளை கடந்து லட்சங்கள், ஏழைகளுக்கு தெருக்கோடிகளும் ?
இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ. 2 லட்சம் கோடி ஊழல்!!
வைமாக்ஸ் நுட்பம் வழங்குவதிலும் ஊழல்
அலைபேசிகளுக்கான 3ஜி சேவை வழங்குவதிலும் லட்சக்கணக்கில் ஊழல்
ஏழை , நாங்கள் ஒரு ஏழை என்று அடிக்கடி கூவி உலக வங்களில் பிச்சையெடுக்காத குறையாக கேட்கும் இந்திய அரசாங்கம் கேட்கிறது.
ஆனால் ஒரு புறம் அதே வழக்கான ஊழல். ஆனால் இம்முறை எல்லாம் லட்சம் கோடிகளில். எப்படி 300 கோடி, நானுறு கோடிகளில் இருந்த ஊழல்கள் தற்போது லட்சங்களில் புரட்டுகிறது?
என்னத்தான் நடக்கிறது? எப்படி வந்தன இவ்வளவு லட்சங்களின் கோடிகள்....
சில வருடங்களுக்கு முன்பு நீங்கள் ஒரு உண்மையை கண்டிருக்கலாம்.
சாதாரணமாக கிடந்த விலைவாசி முதற்கொண்டு பயிரடித்துக்கொண்டிருந்த விலைநிலங்கள் கூட திடீரென்று உச்சாணிக்கொம்பிற்கு சென்றது. மாத சம்பளமெல்லாம் அதிகப்பட்சம் 10,000 ரூபாய் என்றாலே பெரிய மதிப்பாக கருதப்பட்ட காலத்தில் லட்சமே சொச்சமானது
எல்லாவற்றிற்கும் முக்கிய காரணம்.
ஐடி எனப்படும் தொழில்நுட்ப சேவைக.இவைகள் வந்தபின்னர்தான்.......
உலக பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டது.
அப்படி வந்தபின்னர் இந்தியா முழுதும் ஒரு ரூபாயில் பேச வழிவகை செய்யப்பட்டது. ஆனால் அதன்பின்னர்தான் தொழில்நுட்பம் வழியாகமிகப்பெரிய மாற்றங்கள் விளைந்தன.
அந்த தொழில்நுட்பங்கள்தான் இவற்றிற்கு காரணம். அந்த தொழில்நுட்பங்கள் பயன்பட அவற்றிற்கு ஒரு ஊடகம் தேவை. அந்த ஊடகம் என்ன தெரியுமா?
அதுதான் இயற்கை வளங்கள்.
நாம் பேசும் போனில் ஒரு விநாடிக்கு பேசும் காசு முதல் இணையத்தில் இந்த செய்தியை படிப்பது வரை எல்லாமே பணம்தான்.
மொபைல்களுக்கு எப்படி ஸ்பெக்ட்ரமோ , இணையங்களுக்கு பேண்ட்வித்.
நாட்டின் இயற்கை வளங்கள் எல்லாம் அரசாங்கத்திற்கே சொந்தம் என்ற அடிப்படையில் தொழில்நுட்பத்திற்கு தேவையான ஸ்பெக்டரம் , பேண்ட்வித், அலைவரிசைகளும், இணையநுட்பத்திற்கு பயன்படும் வைமாக்ஸ் நுட்பமும், செயற்கை கோள் அலைவரிசைகள் உட்பட நுட்பத்திற்கு  தேவையான எல்லா அலைவரிசைகளும் அரசாங்கத்திற்கே சொந்தமானது. இந்த இயற்கை வளங்களை  நிறுவனங்களுக்கு கொடுப்பதுதான் அரசியல்வாதிகளின் வேலை. இதுபற்றி அறிந்தவர்கள் மிக சொற்பமானவர்கள் என்பதால் அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தில் இந்த இயற்கை நுட்பங்கள் சென்றுவிட்டன.
இவைகள்தான் இன்று ஊழல் அரசியல்வாதிகளுக்கு ஊக்கமாய் அமைந்து கோடிகளில் இருந்த ஊழல்கள், பல ஆயிரக்கணக்கான கோடிகளாய் மாறி இன்று லட்சம் கோடிகளில் ஓடுகின்றன.
அட அந்த அளவு வருமானம் வருமா இதில்? என்று கேட்கிறீர்களா?
நிச்சயமாய் வரும்
காரணம் இந்தியா உலகின் இரண்டாவது மிகபெரும் செல்போன் சந்தை அதே சமயம் உலக மக்கள் தொகையில் முன்னணியில் வரவிருக்கும் நாடு.இதுதான் வளம். உலகின் முக்கிய வியாபாரம் இந்தியாவை நோக்கித்தான். அதுதான்இந்தியாவின் மக்கள் வளமும், மனித வளமும். இந்தியாவில் தற்சமயம் 72 கோடி செல்போன்கள் உள்ளன.2103ல் இந்தியாவில் 115 கோடி செல்போன் இணைப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.ஆக இந்திய செல்போன் சந்தை மாபெரும் வளமான அதே சமயம் வருமானமுள்ள சந்தை. ஒவ்வொரு மாதமும் பல கோடி பேர்கள் இணையும் நுட்பம்
நிமிடத்தில் கோடி ரூபாயை சம்பாதித்து தரும் இத்தகைய வளம் நிரம்பிய துறையை அரசியல்வாதிகள் விட்டு வைப்பார்கள ா? தொலைபேசிகளுக்கான ஸ்பெக்ட்ரம் அலைகற்றைக்கு உரிமம் வழங்குவதில் முறைகேடுகள் துவங்கின.நாம் ஒரு சொத்தை விற்கவேண்டும் என வைத்து கொள்ளுங்கள்..உதாரணத்துக்கு ஒரு வீட்டை விற்கிறோம்.வீட்டுக்கு அதிகபட்ச தொகையை பெறுவது எப்படி என்பதில் தானே குறியாக இருப்போம்?அதிகபட்ச தொகை வேண்டுமெனில் பகிரங்க ஏலம் அல்லது டெண்டர் மூலம் விற்போம்.ஆனால் சுமார் 1,76,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஸ்பெக்ட்ரம் லைசென்சை இம்முறைகள் எதையும் பயன்படுத்தாமல் "முதலில் யார் வந்து என்ன விலைக்கு கேட்டார்களோ அதை அவர்களுக்கு கொடுப்பது" என்ற முறையை பின்பற்றி விற்க்கபட்டது நாட்டுக்கு லட்சகணக்கான கோடி ரூபாய்கள் நஷ்டம் ஏற்பட காரணம் ஆகிவிட்டது என சி.ஏ.ஜி ரிப்போர்ட் தெரிவிக்கிறது
1,76,000 கோடி என்பது நஷ்ட தொகைதானே தவிர ஊழல் தொகை அல்ல என்பதையும் குறிப்பிட வேண்டும்.அதாவது உங்கள் வீடு ஒரு கோடி மதிப்புள்ளது என வைத்துகொள்வோம்.அதை உங்கள் ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் லட்சம் ரூபாய்க்கு விற்று விடுகிறார்.ஆக உங்களுக்கு நஷ்டம் 99 லட்சம்.ஆனால் 99 லட்சமும் ஊழல் தொகையா என்றால் இல்லை.அதை விட குறைந்த தொகை.ஆனால் எத்தனை என்பது இன்னமும் தெரியாது.யூகம் தான் செய்ய இயலும்
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பல விதிமீறல்கள் நடந்துள்ளன.2008ல் ஏலம் விடப்பட்ட ஸ்பெக்ட்ரம் லைசென்சுகளுக்கு 2001ம் வருட குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யபட்டது.2001ல் வெறும் நாற்பது லட்சம் செல்போன் பயனாளிகள் மட்டுமே நாட்டில் இருந்தனர்.2008ல் அதே எண்ணிக்கை 35 கோடியாக உயர்ந்தது என்றால் 2001 விலையை 2008ல் வாங்குவது எத்தனை அடிமாட்டு விலைக்கு பொருளை விற்பது என எண்ணி பார்க்கலாம்.
விற்பனை துவங்கியதும் "முதலில் வருபவருக்கு லைசென்ஸ்" என்ற முறை பின்பற்றபட்டது.விண்ணப்பம் அளீப்பதற்கான கட் ஆஃப் தேதி ஒரு வாரம் குறைக்கபட்டது.பகிரங்க ஏலம் விட சொல்லி ட்ராய், நிதி அமைச்சகம், பிரதமர் அலுலவகம் ஆகியவை சொன்ன ஆலோசனைகள் பின்பற்றபடவில்லை.
செல்போன் துறையில் எந்த அனுபவமும் அற்ற கம்பனிகள் லைசென்சை வாங்கின.ஸ்வான் எனும் நிறுவனம் 1537 கோடிக்கு லைசென்சை வாங்கி தனது 45% பங்குகளை மட்டும் 4500 கோடிக்கு விற்று லாபம் பார்த்தது.அப்படியானால் இழப்பு எத்தனை சதவிகிதம் என யோசித்து பார்த்தால் தெரியும்.
இதே போல இஸ்ரோ வசம் இருந்த ஸ்பெக்ட்ரம் கற்றைகள் விற்பதிலும் ஊழல் நடப்பதாக செய்தி வந்தது.பெங்களூரை சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்கு எஸ்-பாண்ட் ஸ்பெக்ட்ரம் ஏல நடைமுரையை பின்பற்றாமல் வழங்கப்பட  அதனால் 2 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக செய்தி வர இறுதியில் மத்திய அரசு தலையிட்டு அதை நிறுத்த வேண்டியதானது்டது.சி.ஏ.ஜி அறிக்கையால் இஸ்ரோவில் நடக்கவிருந்த மிகப்பெரும் ஊழல் தவிர்கப்பட்டது,.
நாட்டை முன்பு குலுக்கிய போபர்ஸ் வழக்கில் ஊழல் தொகை வெறும் 64 கோடிதான்.இன்று அதே ஊழல் லட்சம் கோடிகளில் புரளும் சூழல் வந்துவிட்டது.
ஆனால் மக்கள் அரசாங்கங்களை கேள்வி கேட்கவேண்டும். அரசின் செயல்பாடுகள் மக்கள் யாவருக்கு தெரியவேண்டும்.அவ்வாறு தெரியாவிடில் மக்கள் கேள்வி கேட்கவேண்டும்.
ஆனால் நிதர்சன உண்மை என்னவெனில்  கட்சிகள் ஒட்டுக்கு காசுக்கு கொடுத்து மக்களையும் தங்கள் ஊழலில் கூட்டாளிகளாக சேர்த்துவருகின்றன.

செல்வன், பிசினஸ் அனலிஸ்ட் & செல்வ.முரளி


 

இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ. 2 லட்சம் கோடி ஊழல்!!

வைமாக்ஸ் நுட்பம் வழங்குவதிலும் ஊழல்

அலைபேசிகளுக்கான 3ஜி சேவை வழங்குவதிலும் லட்சக்கணக்கில் ஊழல்

ஏழை , நாங்கள் ஒரு ஏழை என்று அடிக்கடி கூவி உலக வங்களில் பிச்சையெடுக்காத குறையாக  இந்திய அரசாங்கம் கேட்கிறது. ஆனால் ஒரு புறம் அதே வழக்கான ஊழல். ஆனால் இம்முறை எல்லாம் லட்சம் கோடிகளில். எப்படி 300 கோடி, நானுறு கோடிகளில் இருந்த ஊழல்கள் தற்போது லட்சங்களில் புரட்டுகிறது? என்னத்தான் நடக்கிறது? எப்படி வந்தன இவ்வளவு லட்சங்களின் கோடிகள்....

Last Updated ( Monday, 21 February 2011 17:00 )

Read more...

கூகுள், ஆப்பிளுக்குப் போட்டியாக மைக்ரோசாப்ட், நோக்கியா

கூகுள், ஆப்பிளுக்குப் போட்டியாக மைக்ரோசாப்ட், நோக்கியா
செல்போன் உற்பத்தியில் பெரிய நிறுவனமான நோக்கியா, தனது மென்பொருள் சேவைகளுக்கு மைக்ரோசாப்டுடன் கூட்டுச் சேர்கிறது. இதன் மூலம் கூகுள், ஆப்பிள் நிறுவனங்களின் கூட்டிற்கு போட்டியாக மைக்ரோசாப்ட், நோக்கியா இருக்கப் போகிறது.
ஆப்பிளின் ஆப்ரேடிங் சிஸ்டத்துடன் வரும் கூகுளின் ஆண்ட்ராய்டிற்குப் போட்டியாக நோக்கியா மைக்ரோசப்டுடன் இணைவதாக தெரிந்ததும் கடந்த பத்து மாதங்களில் இல்லாத அளவில் நோக்கியாவின் பங்குகள் 12 % சரிந்துள்ளது.
லண்டனைச் சேர்ந்த பென் வுட் கூறுகையில், நோக்கியாவின் சொந்த தொழில்நுட்பங்கள் நிலையற்ற தன்மையால், மைக்ரோசப்டுடன் இணைகிறது. இதில் மைக்ரோசப்டே பெரும் பலனை அனுபவிக்கப் போகிறது.
மரத்தூள் நிறுவனமாக இருந்த நோக்கியா 1980 -ல் செல்போன் தயாரிக்கத் துவங்கியது. மைக்ரோசாப்டுடன் இணைவது இந்நிறுவன வரலாற்றில் முக்கிய நிகழ்வாக இருக்கப் போகிறது.
பின்லாந்தைத் தலைமையிடமாகக் கொண்ட நோக்கியாவின் புதிய தலைமை செயல் அதிகாரி ஸ்டீபன் ஈலாப் கூறுகையில்:
கடந்த காலாண்டில் எங்கள் இலாபம் 50.8% லிருந்து குறைந்து 27.1% உள்ளது.ஜீன் 2007 -ல் ஆப்பிளின் ஜபோன் வந்ததும் எங்களின் விற்பனை 60% குறைந்துவிட்டது.
மைக்ரோசாப்டின் செல்போன் மென்பொருள்  இரட்டிப்பாக இருந்த விற்பனை , ஆப்பிள்ன் ஜபோன் வரவால் சரிந்தது. மைக்ரோசாப்டின் விண்டோஸ் போன் 7 மென்பொருள் மூலம் இழந்த விற்பனை மீட்ட உள்ளது.
சர்வதேச அளவில் செல்போன் விற்பனைப் பிரிவுகளை வைத்துள்ள நோக்கியாவுடன் இணைவதன் மூலம் மைக்ரோசாப்டும் பலன் அனுபவிக்க முடியும். மைக்ரோசாப்டின் சி இ ஒ ஸ்டீவ் பால்மர் கூறுகையில் , நாங்கள் இரு நிறுவனத் தொழில்நுட்பங்களுடன் இணைந்து முதல் நோக்கியா விண்டோஸ் போன் தயாரிப்பை ஏற்கனவே தொடங்கிவிட்டோம்.
நோக்கியாவின் மேப்ஸ் பொருட்கள், மைக்ரோசாப்டின் முக்கிய சேவைப் பொருளாகவும், மைக்ரோசாப்ட்டின் மேம்பாட்டு தொழில்நுட்பங்கள், புதிய பயன்பாடுகளை நோக்கியாவின் விண்டோஸ் போனில் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும்.
இரு நிறுவனங்களையும் இணைக்கும் செயல்கள் 2011,2012 ஆம் ஆண்டுகளில் இருக்கும்.மைக்ரோசாப்டுடன் இணையும் திட்டமில்லாத நிலையில் எங்களின் கூட்டு மூன்று குதிரைகளின் ரேஸ் போல் நோக்கியா, மைக்ரோசாப்ட் சர்வதேச அளவில் அதிகளவு மக்களைச் சென்றடைய எங்களின் பலங்கள் வலு சேர்க்குமென ஸ்டீபன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
FIM வங்கி அதிகாரி மைக்கேல் கூறுகையில், புதிய கண்டுபிடிப்புகளுக்கும், இரு ந்றுவனக்களின் இணைப்பிற்கும் நோக்கியா கூறும் இரு வருட இடைவெளியில் இவர்களின் போட்டியாளர்கள் எத்தனை புதிய பயன்பாடுகளைக் கண்டுபிடிப்பார்கள் என்பதையும் நோக்கியா கவனத்தில் கொள்ளா வேண்டும்.
ஆப்பிளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான தொகையைவிட நான்கு மடங்கு தொகையை செலவிட்டு வந்த நோக்கியா, இப்போது அதை $8.1 பில்லியன்களாகக் குறைக்கிறது.இதனால் நோக்கியாவில் பணியாளர் குறைப்பும் இருக்கலாம்.
.
செல்போன் உற்பத்தியில் பெரிய நிறுவனமான நோக்கியா, தனது மென்பொருள் சேவைகளுக்கு மைக்ரோசாப்டுடன் கூட்டுச் சேர்கிறது. இதன் மூலம் கூகுள், ஆப்பிள் நிறுவனங்களின் கூட்டிற்கு போட்டியாக மைக்ரோசாப்ட், நோக்கியா இருக்கப் போகிறது. ஆப்பிளின் ஆப்ரேடிங் சிஸ்டத்துடன் வரும் கூகுளின் ஆண்ட்ராய்டிற்குப் போட்டியாக நோக்கியா மைக்ரோசப்டுடன் இணைவதாக தெரிந்ததும் கடந்த பத்து மாதங்களில் இல்லாத அளவில் நோக்கியாவின் பங்குகள் 12 % சரிந்துள்ளது.

Last Updated ( Sunday, 13 February 2011 05:12 )

Read more...
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  4 
  •  5 
  •  6 
  •  7 
  •  8 
  •  9 
  •  Next 
  •  End 
  • »
Page 1 of 9