இந்தியன் ரயில்வே கேட்டரிங் அண்ட் டூரிசம் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனம், ஏர் டிக்கெட்டிங் சேவையை அறிமுகப்படுத்துகிறது. இதுகுறித்து, அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : உலகின் அதிக ஊழியர்கள் பணியாற்றும் அரசுத்துறையான இந்திய ரயில்வே துறையின் 30 சதவீத டிக்கெட்கள் தங்கள் நிறவனம் மூலமே, முன்பதிவு செய்யப்பட்டு வருவதாகவும், ஏர் டிக்கெட்டிங் சேவையை துவக்குவதிலும் பெரும் மகிழ்ச்சி கொள்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிமுகச் சலுகையாக, 10 சதவீதம் கேஷ்பேக் திட்டத்துடன் ஏர் டிக்கெட்டிங் சேவை துவக்கப்பட உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!





