Sunday
May 20th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

இனி ஏ.டி.எம்-யிலும் "தங்கம் கொட்டும்"

E-mail Print PDF

இருபத்துநான்கு மணி நேரமும் பணம் எடுக்க, இப்போது, தெருவுக்கு தெரு ஏ.டி.எம்.,கள் வந்து விட்டன. தானியங்கி பணம் வழங்கும் இந்த இயந்திரங்கள் மக்களுக்கு மிகவும் வசதியாக உள்ளன. 'ஏ.டி.எம்.,மில் பணம் மட்டுமே வழங்க வேண்டுமா? தங்கத்தை வழங்கினால் என்ன?' என யோசித்தது ஒரு நிறுவனம். உடனே, தங்கம் வழங்கும் ஏ.டி.எம்., இயந்திரத்தையும் நிறுவி விட்டது. ஆனால், இது இந்தியாவில் அல்ல. ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகர ஓட்டல் ஒன்றில் இந்த ஏ.டி.எம்., நிறுவப்பட்டுள்ளது. இந்த ஏ.டி.எம்.,மில் நீங்கள் தங்கம் வாங்க கார்டை செருக வேண்டாம். அதற்கு பதில், பணத்தை போட வேண்டும். பணத்தின் மதிப்பிற்கு ஏற்ப ஒன்று, ஐந்து அல்லது பத்து கிராம் எடையுள்ள தங்க பார்கள் வந்து விழும். தங்கத்தின் விலை அவ்வப்போது ஏறி வரும். எனவே, இந்த இயந்திரமும் தங்கத்தின் விலையை பத்து நிமிடங்களுக்கு, ஒரு முறை சரி செய்து கொள்ளும். 'எக்ஸ் ஓரியன்ட் லக்ஸ் ஏ.ஜி.,' என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தாமஸ் ஜிஸ்லர் என்பவர், இந்த இயந்திரத்தை மாட்ரிட் நகரில் வெஸ்டின் பேலஸ் என்ற ஓட்டலில் நிறுவியுள்ளார். 'விழாக்களின் போது பரிசாக கொடுக்க தங்க நாணயங்களை வாங்க கடைகளுக்கு செல்வதை தவிர்க்க, இந்த இயந்திரத்தை நிறுவி உள்ளோம். மிக குறைந்த பணத்திற்கு கூட சிறிய நாணயத்தை இந்த இயந்திரம் மூலம் வாங்கலாம்!' என தாமஸ் கூறியுள்ளார். இந்தியாவிலும் இந்த இயந்திரத்தை பொருத்தி விட்டால், நகைக்கடைகளில் கூட்டத்தை குறைக்கலாம் 


நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate::?::(
:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.