செல்போன் உற்பத்தியில் பெரிய நிறுவனமான நோக்கியா, தனது மென்பொருள் சேவைகளுக்கு மைக்ரோசாப்டுடன் கூட்டுச் சேர்கிறது. இதன் மூலம் கூகுள், ஆப்பிள் நிறுவனங்களின் கூட்டிற்கு போட்டியாக மைக்ரோசாப்ட், நோக்கியா இருக்கப் போகிறது. ஆப்பிளின் ஆப்ரேடிங் சிஸ்டத்துடன் வரும் கூகுளின் ஆண்ட்ராய்டிற்குப் போட்டியாக நோக்கியா மைக்ரோசப்டுடன் இணைவதாக தெரிந்ததும் கடந்த பத்து மாதங்களில் இல்லாத அளவில் நோக்கியாவின் பங்குகள் 12 % சரிந்துள்ளது.
லண்டனைச் சேர்ந்த பென் வுட் கூறுகையில், நோக்கியாவின் சொந்த தொழில்நுட்பங்கள் நிலையற்ற தன்மையால், மைக்ரோசப்டுடன் இணைகிறது. இதில் மைக்ரோசாப்ட் நிறுவனமே பெரும் பலனை அனுபவிக்கப் போகிறது.
முதலில் மரத்தூள் நிறுவனமாக இருந்த நோக்கியா 1980 -ல் செல்போன் தயாரிக்கத் துவங்கியது. மைக்ரோசாப்டுடன் இணைவது இந்நிறுவன வரலாற்றில் முக்கிய நிகழ்வாக இருக்கப் போகிறது. பின்லாந்தைத் தலைமையிடமாகக் கொண்ட நோக்கியாவின் புதிய தலைமை செயல் அதிகாரி ஸ்டீபன் ஈலாப் கூறுகையில்:
கடந்த காலாண்டில் எங்கள் இலாபம் 50.8% லிருந்து குறைந்து 27.1% உள்ளது.ஜீன் 2007 -ல் ஆப்பிளின் ஜபோன் வந்ததும் எங்களின் விற்பனை 60% குறைந்துவிட்டது. மைக்ரோசாப்டின் செல்போன் மென்பொருள் இரட்டிப்பாக இருந்த விற்பனை , ஆப்பிள்ன் ஜபோன் வரவால் சரிந்தது. மைக்ரோசாப்டின் விண்டோஸ் போன் 7 மென்பொருள் மூலம் இழந்த விற்பனை மீட்ட உள்ளது.
சர்வதேச அளவில் செல்போன் விற்பனைப் பிரிவுகளை வைத்துள்ள நோக்கியாவுடன் இணைவதன் மூலம் மைக்ரோசாப்டும் பலன் அனுபவிக்க முடியும். மைக்ரோசாப்டின் சி இ ஒ ஸ்டீவ் பால்மர் கூறுகையில் , நாங்கள் இரு நிறுவனத் தொழில்நுட்பங்களுடன் இணைந்து முதல் நோக்கியா விண்டோஸ் போன் தயாரிப்பை ஏற்கனவே தொடங்கிவிட்டோம்.
நோக்கியாவின் மேப்ஸ் பொருட்கள், மைக்ரோசாப்டின் முக்கிய சேவைப் பொருளாகவும், மைக்ரோசாப்ட்டின் மேம்பாட்டு தொழில்நுட்பங்கள், புதிய பயன்பாடுகளை நோக்கியாவின் விண்டோஸ் போனில் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும்.
இரு நிறுவனங்களையும் இணைக்கும் செயல்கள் 2011,2012 ஆம் ஆண்டுகளில் இருக்கும்.மைக்ரோசாப்டுடன் இணையும் திட்டமில்லாத நிலையில் எங்களின் கூட்டு மூன்று குதிரைகளின் ரேஸ் போல் நோக்கியா, மைக்ரோசாப்ட் சர்வதேச அளவில் அதிகளவு மக்களைச் சென்றடைய எங்களின் பலங்கள் வலு சேர்க்குமென ஸ்டீபன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
FIM வங்கி அதிகாரி மைக்கேல் கூறுகையில், புதிய கண்டுபிடிப்புகளுக்கும், இரு நிறுவனக்கங்ளின் இணைப்பிற்கும் நோக்கியா கூறும் இரு வருட இடைவெளியில் இவர்களின் போட்டியாளர்கள் எத்தனை புதிய பயன்பாடுகளைக் கண்டுபிடிப்பார்கள் என்பதையும் நோக்கியா கவனத்தில் கொள்ளா வேண்டும்.
ஆப்பிளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான தொகையைவிட நான்கு மடங்கு தொகையை செலவிட்டு வந்த நோக்கியா, இப்போது அதை $8.1 பில்லியன்களாகக் குறைக்கிறது.இதனால் நோக்கியாவில் பணியாளர் குறைப்பும் இருக்கலாம்.
இரு ஜாம்பவான் நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றும்போது உலகளாவிய அளவில் வாய்ப்புகள் கிடைத்தாலும் கூகிள் நிறுவனம் எப்படி ஆன்ட்ராய்டு அலைபேசிகளில் தான் வழங்கிவரும் சேவைகளை எளிதாக பயன்படுத்தும்வகையில் உருவாக்கிவருகிறதோ அதேபோன்ற ஒரு சேவையை நோக்கியாவுடன் இணைந்து முழுவதும் தன் மென்பொருட்களை அதில் ஆக்கிரமிக்க செய்யப்போகிறது மைக்ரோசாப்ட்.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!





