Sunday
May 20th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோடிகளை கடந்து லட்சங்கள், ஏழைகளுக்கு தெருக்கோடிகளும் ?

E-mail Print PDF
கோடிகளை கடந்து லட்சங்கள், ஏழைகளுக்கு தெருக்கோடிகளும் ?
இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ. 2 லட்சம் கோடி ஊழல்!!
வைமாக்ஸ் நுட்பம் வழங்குவதிலும் ஊழல்
அலைபேசிகளுக்கான 3ஜி சேவை வழங்குவதிலும் லட்சக்கணக்கில் ஊழல்
ஏழை , நாங்கள் ஒரு ஏழை என்று அடிக்கடி கூவி உலக வங்களில் பிச்சையெடுக்காத குறையாக கேட்கும் இந்திய அரசாங்கம் கேட்கிறது.
ஆனால் ஒரு புறம் அதே வழக்கான ஊழல். ஆனால் இம்முறை எல்லாம் லட்சம் கோடிகளில். எப்படி 300 கோடி, நானுறு கோடிகளில் இருந்த ஊழல்கள் தற்போது லட்சங்களில் புரட்டுகிறது?
என்னத்தான் நடக்கிறது? எப்படி வந்தன இவ்வளவு லட்சங்களின் கோடிகள்....
சில வருடங்களுக்கு முன்பு நீங்கள் ஒரு உண்மையை கண்டிருக்கலாம்.
சாதாரணமாக கிடந்த விலைவாசி முதற்கொண்டு பயிரடித்துக்கொண்டிருந்த விலைநிலங்கள் கூட திடீரென்று உச்சாணிக்கொம்பிற்கு சென்றது. மாத சம்பளமெல்லாம் அதிகப்பட்சம் 10,000 ரூபாய் என்றாலே பெரிய மதிப்பாக கருதப்பட்ட காலத்தில் லட்சமே சொச்சமானது
எல்லாவற்றிற்கும் முக்கிய காரணம்.
ஐடி எனப்படும் தொழில்நுட்ப சேவைக.இவைகள் வந்தபின்னர்தான்.......
உலக பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டது.
அப்படி வந்தபின்னர் இந்தியா முழுதும் ஒரு ரூபாயில் பேச வழிவகை செய்யப்பட்டது. ஆனால் அதன்பின்னர்தான் தொழில்நுட்பம் வழியாகமிகப்பெரிய மாற்றங்கள் விளைந்தன.
அந்த தொழில்நுட்பங்கள்தான் இவற்றிற்கு காரணம். அந்த தொழில்நுட்பங்கள் பயன்பட அவற்றிற்கு ஒரு ஊடகம் தேவை. அந்த ஊடகம் என்ன தெரியுமா?
அதுதான் இயற்கை வளங்கள்.
நாம் பேசும் போனில் ஒரு விநாடிக்கு பேசும் காசு முதல் இணையத்தில் இந்த செய்தியை படிப்பது வரை எல்லாமே பணம்தான்.
மொபைல்களுக்கு எப்படி ஸ்பெக்ட்ரமோ , இணையங்களுக்கு பேண்ட்வித்.
நாட்டின் இயற்கை வளங்கள் எல்லாம் அரசாங்கத்திற்கே சொந்தம் என்ற அடிப்படையில் தொழில்நுட்பத்திற்கு தேவையான ஸ்பெக்டரம் , பேண்ட்வித், அலைவரிசைகளும், இணையநுட்பத்திற்கு பயன்படும் வைமாக்ஸ் நுட்பமும், செயற்கை கோள் அலைவரிசைகள் உட்பட நுட்பத்திற்கு  தேவையான எல்லா அலைவரிசைகளும் அரசாங்கத்திற்கே சொந்தமானது. இந்த இயற்கை வளங்களை  நிறுவனங்களுக்கு கொடுப்பதுதான் அரசியல்வாதிகளின் வேலை. இதுபற்றி அறிந்தவர்கள் மிக சொற்பமானவர்கள் என்பதால் அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தில் இந்த இயற்கை நுட்பங்கள் சென்றுவிட்டன.
இவைகள்தான் இன்று ஊழல் அரசியல்வாதிகளுக்கு ஊக்கமாய் அமைந்து கோடிகளில் இருந்த ஊழல்கள், பல ஆயிரக்கணக்கான கோடிகளாய் மாறி இன்று லட்சம் கோடிகளில் ஓடுகின்றன.
அட அந்த அளவு வருமானம் வருமா இதில்? என்று கேட்கிறீர்களா?
நிச்சயமாய் வரும்
காரணம் இந்தியா உலகின் இரண்டாவது மிகபெரும் செல்போன் சந்தை அதே சமயம் உலக மக்கள் தொகையில் முன்னணியில் வரவிருக்கும் நாடு.இதுதான் வளம். உலகின் முக்கிய வியாபாரம் இந்தியாவை நோக்கித்தான். அதுதான்இந்தியாவின் மக்கள் வளமும், மனித வளமும். இந்தியாவில் தற்சமயம் 72 கோடி செல்போன்கள் உள்ளன.2103ல் இந்தியாவில் 115 கோடி செல்போன் இணைப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.ஆக இந்திய செல்போன் சந்தை மாபெரும் வளமான அதே சமயம் வருமானமுள்ள சந்தை. ஒவ்வொரு மாதமும் பல கோடி பேர்கள் இணையும் நுட்பம்
நிமிடத்தில் கோடி ரூபாயை சம்பாதித்து தரும் இத்தகைய வளம் நிரம்பிய துறையை அரசியல்வாதிகள் விட்டு வைப்பார்கள ா? தொலைபேசிகளுக்கான ஸ்பெக்ட்ரம் அலைகற்றைக்கு உரிமம் வழங்குவதில் முறைகேடுகள் துவங்கின.நாம் ஒரு சொத்தை விற்கவேண்டும் என வைத்து கொள்ளுங்கள்..உதாரணத்துக்கு ஒரு வீட்டை விற்கிறோம்.வீட்டுக்கு அதிகபட்ச தொகையை பெறுவது எப்படி என்பதில் தானே குறியாக இருப்போம்?அதிகபட்ச தொகை வேண்டுமெனில் பகிரங்க ஏலம் அல்லது டெண்டர் மூலம் விற்போம்.ஆனால் சுமார் 1,76,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஸ்பெக்ட்ரம் லைசென்சை இம்முறைகள் எதையும் பயன்படுத்தாமல் "முதலில் யார் வந்து என்ன விலைக்கு கேட்டார்களோ அதை அவர்களுக்கு கொடுப்பது" என்ற முறையை பின்பற்றி விற்க்கபட்டது நாட்டுக்கு லட்சகணக்கான கோடி ரூபாய்கள் நஷ்டம் ஏற்பட காரணம் ஆகிவிட்டது என சி.ஏ.ஜி ரிப்போர்ட் தெரிவிக்கிறது
1,76,000 கோடி என்பது நஷ்ட தொகைதானே தவிர ஊழல் தொகை அல்ல என்பதையும் குறிப்பிட வேண்டும்.அதாவது உங்கள் வீடு ஒரு கோடி மதிப்புள்ளது என வைத்துகொள்வோம்.அதை உங்கள் ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் லட்சம் ரூபாய்க்கு விற்று விடுகிறார்.ஆக உங்களுக்கு நஷ்டம் 99 லட்சம்.ஆனால் 99 லட்சமும் ஊழல் தொகையா என்றால் இல்லை.அதை விட குறைந்த தொகை.ஆனால் எத்தனை என்பது இன்னமும் தெரியாது.யூகம் தான் செய்ய இயலும்
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பல விதிமீறல்கள் நடந்துள்ளன.2008ல் ஏலம் விடப்பட்ட ஸ்பெக்ட்ரம் லைசென்சுகளுக்கு 2001ம் வருட குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யபட்டது.2001ல் வெறும் நாற்பது லட்சம் செல்போன் பயனாளிகள் மட்டுமே நாட்டில் இருந்தனர்.2008ல் அதே எண்ணிக்கை 35 கோடியாக உயர்ந்தது என்றால் 2001 விலையை 2008ல் வாங்குவது எத்தனை அடிமாட்டு விலைக்கு பொருளை விற்பது என எண்ணி பார்க்கலாம்.
விற்பனை துவங்கியதும் "முதலில் வருபவருக்கு லைசென்ஸ்" என்ற முறை பின்பற்றபட்டது.விண்ணப்பம் அளீப்பதற்கான கட் ஆஃப் தேதி ஒரு வாரம் குறைக்கபட்டது.பகிரங்க ஏலம் விட சொல்லி ட்ராய், நிதி அமைச்சகம், பிரதமர் அலுலவகம் ஆகியவை சொன்ன ஆலோசனைகள் பின்பற்றபடவில்லை.
செல்போன் துறையில் எந்த அனுபவமும் அற்ற கம்பனிகள் லைசென்சை வாங்கின.ஸ்வான் எனும் நிறுவனம் 1537 கோடிக்கு லைசென்சை வாங்கி தனது 45% பங்குகளை மட்டும் 4500 கோடிக்கு விற்று லாபம் பார்த்தது.அப்படியானால் இழப்பு எத்தனை சதவிகிதம் என யோசித்து பார்த்தால் தெரியும்.
இதே போல இஸ்ரோ வசம் இருந்த ஸ்பெக்ட்ரம் கற்றைகள் விற்பதிலும் ஊழல் நடப்பதாக செய்தி வந்தது.பெங்களூரை சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்கு எஸ்-பாண்ட் ஸ்பெக்ட்ரம் ஏல நடைமுரையை பின்பற்றாமல் வழங்கப்பட  அதனால் 2 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக செய்தி வர இறுதியில் மத்திய அரசு தலையிட்டு அதை நிறுத்த வேண்டியதானது்டது.சி.ஏ.ஜி அறிக்கையால் இஸ்ரோவில் நடக்கவிருந்த மிகப்பெரும் ஊழல் தவிர்கப்பட்டது,.
நாட்டை முன்பு குலுக்கிய போபர்ஸ் வழக்கில் ஊழல் தொகை வெறும் 64 கோடிதான்.இன்று அதே ஊழல் லட்சம் கோடிகளில் புரளும் சூழல் வந்துவிட்டது.
ஆனால் மக்கள் அரசாங்கங்களை கேள்வி கேட்கவேண்டும். அரசின் செயல்பாடுகள் மக்கள் யாவருக்கு தெரியவேண்டும்.அவ்வாறு தெரியாவிடில் மக்கள் கேள்வி கேட்கவேண்டும்.
ஆனால் நிதர்சன உண்மை என்னவெனில்  கட்சிகள் ஒட்டுக்கு காசுக்கு கொடுத்து மக்களையும் தங்கள் ஊழலில் கூட்டாளிகளாக சேர்த்துவருகின்றன.

செல்வன், பிசினஸ் அனலிஸ்ட் & செல்வ.முரளி

இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ. 2 லட்சம் கோடி ஊழல்!!

வைமாக்ஸ் நுட்பம் வழங்குவதிலும் ஊழல்

அலைபேசிகளுக்கான 3ஜி சேவை வழங்குவதிலும் லட்சக்கணக்கில் ஊழல்

ஏழை , நாங்கள் ஒரு ஏழை என்று அடிக்கடி கூவி உலக வங்களில் பிச்சையெடுக்காத குறையாக  இந்திய அரசாங்கம் கேட்கிறது. ஆனால் ஒரு புறம் அதே வழக்கான ஊழல். ஆனால் இம்முறை எல்லாம் லட்சம் கோடிகளில். எப்படி 300 கோடி, நானுறு கோடிகளில் இருந்த ஊழல்கள் தற்போது லட்சங்களில் புரட்டுகிறது? என்னத்தான் நடக்கிறது? எப்படி வந்தன இவ்வளவு லட்சங்களின் கோடிகள்....

சில வருடங்களுக்கு முன்பு நீங்கள் ஒரு உண்மையை கண்டிருக்கலாம்.

சாதாரணமாக கிடந்த விலைவாசி முதற்கொண்டு பயிரடித்துக்கொண்டிருந்த விலைநிலங்கள் கூட திடீரென்று உச்சாணிக்கொம்பிற்கு சென்றது. மாத சம்பளமெல்லாம் அதிகப்பட்சம் 10,000 ரூபாய் என்றாலே பெரிய மதிப்பாக கருதப்பட்ட காலத்தில் லட்சமே சொச்சமானது

எல்லாவற்றிற்கும் முக்கிய காரணம். ஐடி எனப்படும் தொழில்நுட்ப சேவைகள் வந்தபின்னர்தான்.......உலக பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டது. அப்படி வந்தபின்னர் இந்தியா முழுதும் ஒரு ரூபாயில் பேச வழிவகை செய்யப்பட்டது. ஆனால் அதன்பின்னர்தான் தொழில்நுட்பம் வழியாகமிகப்பெரிய மாற்றங்கள் விளைந்தன.

அந்த தொழில்நுட்பங்கள்தான் இவற்றிற்கு காரணம். அந்ததொழில்நுட்பங்கள் பயன்பட அவற்றிற்கு ஒரு ஊடகம் தேவை. அந்த ஊடகம் என்ன தெரியுமா?

அதுதான் இயற்கை வளங்கள்.

நாம் பேசும் போனில் ஒரு விநாடிக்கு பேசும் காசு முதல் இணையத்தில் இந்த செய்தியை படிப்பது வரை எல்லாமே பணம்தான். மொபைல்களுக்கு எப்படி ஸ்பெக்ட்ரமோ , இணையங்களுக்கு பேண்ட்வித்.இந்த ஸ்பெக்ட்ரமும், பேண்ட்வித் ம் தான் இங்கே வளங்கள்.  இந்த வளங்கள் இருந்தால்தான் இணையமும், மொபைலும், டிடிஎச்ம். ஆக எல்லாமே இந்த இயற்கை வளங்களை அடிப்படையாக வைத்துத்தான்.

நாட்டின் இயற்கை வளங்கள் எல்லாம் அரசாங்கத்திற்கே சொந்தம் என்ற அடிப்படையில் தொழில்நுட்பத்திற்கு தேவையான ஸ்பெக்டரம் , பேண்ட்வித், அலைவரிசைகளும், இணையநுட்பத்திற்கு பயன்படும் வைமாக்ஸ் நுட்பமும், செயற்கை கோள் அலைவரிசைகள் உட்பட நுட்பத்திற்கு தேவையான எல்லா அலைவரிசைகளும் அரசாங்கத்திற்கே சொந்தமானது. இந்த இயற்கை வளங்களை நிறுவனங்களுக்கு கொடுப்பதுதான் அரசியல்வாதிகளின் வேலை. இதுபற்றி அறிந்தவர்கள் மிக சொற்பமானவர்கள் என்பதால் அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தில் இந்த இயற்கை நுட்பங்கள் சென்றுவிட்டன.

இவைகள்தான் இன்று ஊழல் அரசியல்வாதிகளுக்கு ஊக்கமாய் அமைந்து கோடிகளில் இருந்த ஊழல்கள், பல ஆயிரக்கணக்கான கோடிகளாய் மாறி இன்று லட்சம் கோடிகளில் ஓடுகின்றன.

அட அந்த அளவு வருமானம் வருமா இதில்? என்று கேட்கிறீர்களா?

நிச்சயமாய் வரும்

காரணம் இந்தியா உலகின் இரண்டாவது மிகபெரும் செல்போன் சந்தை அதே சமயம் உலக மக்கள் தொகையில் முன்னணியில் வரவிருக்கும் நாடு.இதுதான் வளம். உலகின் முக்கிய வியாபாரம் இந்தியாவை நோக்கித்தான். அதுதான்இந்தியாவின் மக்கள் வளமும், மனித வளமும். இந்தியாவில் தற்சமயம் 72 கோடி செல்போன்கள் உள்ளன.2103ல் இந்தியாவில் 115 கோடி செல்போன் இணைப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.ஆக இந்திய செல்போன் சந்தை மாபெரும் வளமான அதே சமயம் வருமானமுள்ள சந்தை. ஒவ்வொரு மாதமும் பல கோடி பேர்கள் இணையும் நுட்பம்

நிமிடத்தில் கோடி ரூபாயை சம்பாதித்து தரும் இத்தகைய வளம் நிரம்பிய துறையை அரசியல்வாதிகள் விட்டு வைப்பார்கள ா? தொலைபேசிகளுக்கான ஸ்பெக்ட்ரம் அலைகற்றைக்கு உரிமம் வழங்குவதில் முறைகேடுகள் துவங்கின.நாம் ஒரு சொத்தை விற்கவேண்டும் என வைத்து கொள்ளுங்கள்..உதாரணத்துக்கு ஒரு வீட்டை விற்கிறோம்.வீட்டுக்கு அதிகபட்ச தொகையை பெறுவது எப்படி என்பதில் தானே குறியாக இருப்போம்?அதிகபட்ச தொகை வேண்டுமெனில் பகிரங்க ஏலம் அல்லது டெண்டர் மூலம் விற்போம்.ஆனால் சுமார் 1,76,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஸ்பெக்ட்ரம் லைசென்சை இம்முறைகள் எதையும் பயன்படுத்தாமல் "முதலில் யார் வந்து என்ன விலைக்கு கேட்டார்களோ அதை அவர்களுக்கு கொடுப்பது" என்ற முறையை பின்பற்றி விற்க்கபட்டது நாட்டுக்கு லட்சகணக்கான கோடி ரூபாய்கள் நஷ்டம் ஏற்பட காரணம் ஆகிவிட்டது என சி.ஏ.ஜி ரிப்போர்ட் தெரிவிக்கிறது

1,76,000 கோடி என்பது நஷ்ட தொகைதானே தவிர ஊழல் தொகை அல்ல என்பதையும் குறிப்பிட வேண்டும்.அதாவது உங்கள் வீடு ஒரு கோடி மதிப்புள்ளது என வைத்துகொள்வோம்.அதை உங்கள் ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் லட்சம் ரூபாய்க்கு விற்று விடுகிறார்.ஆக உங்களுக்கு நஷ்டம் 99 லட்சம்.ஆனால் 99 லட்சமும் ஊழல் தொகையா என்றால் இல்லை.அதை விட குறைந்த தொகை.ஆனால் எத்தனை என்பது இன்னமும் தெரியாது.யூகம் தான் செய்ய இயலும்

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பல விதிமீறல்கள் நடந்துள்ளன.2008ல் ஏலம் விடப்பட்ட ஸ்பெக்ட்ரம் லைசென்சுகளுக்கு 2001ம் வருட குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யபட்டது.2001ல் வெறும் நாற்பது லட்சம் செல்போன் பயனாளிகள் மட்டுமே நாட்டில் இருந்தனர்.2008ல் அதே எண்ணிக்கை 35 கோடியாக உயர்ந்தது என்றால் 2001 விலையை 2008ல் வாங்குவது எத்தனை அடிமாட்டு விலைக்கு பொருளை விற்பது என எண்ணி பார்க்கலாம்.

விற்பனை துவங்கியதும் "முதலில் வருபவருக்கு லைசென்ஸ்" என்ற முறை பின்பற்றபட்டது.விண்ணப்பம் அளீப்பதற்கான கட் ஆஃப் தேதி ஒரு வாரம் குறைக்கபட்டது.பகிரங்க ஏலம் விட சொல்லி ட்ராய், நிதி அமைச்சகம், பிரதமர் அலுலவகம் ஆகியவை சொன்ன ஆலோசனைகள் பின்பற்றபடவில்லை.

செல்போன் துறையில் எந்த அனுபவமும் அற்ற கம்பனிகள் லைசென்சை வாங்கின.ஸ்வான் எனும் நிறுவனம் 1537 கோடிக்கு லைசென்சை வாங்கி தனது 45% பங்குகளை மட்டும் 4500 கோடிக்கு விற்று லாபம் பார்த்தது.அப்படியானால் இழப்பு எத்தனை சதவிகிதம் என யோசித்து பார்த்தால் தெரியும்.

இதே போல இஸ்ரோ வசம் இருந்த ஸ்பெக்ட்ரம் கற்றைகள் விற்பதிலும் ஊழல் நடப்பதாக செய்தி வந்தது.பெங்களூரை சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்கு எஸ்-பாண்ட் ஸ்பெக்ட்ரம் ஏல நடைமுரையை பின்பற்றாமல் வழங்கப்பட அதனால் 2 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக செய்தி வர இறுதியில் மத்திய அரசு தலையிட்டு அதை நிறுத்த வேண்டியதானது்டது.சி.ஏ.ஜி அறிக்கையால் இஸ்ரோவில் நடக்கவிருந்த மிகப்பெரும் ஊழல் தவிர்கப்பட்டது,.

நாட்டை முன்பு குலுக்கிய போபர்ஸ் வழக்கில் ஊழல் தொகை வெறும் 64 கோடிதான்.இன்று அதே ஊழல் லட்சம் கோடிகளில் புரளும் சூழல் வந்துவிட்டது.

ஆனால் மக்கள் அரசாங்கங்களை கேள்வி கேட்கவேண்டும். அரசின் செயல்பாடுகள் மக்கள் யாவருக்கு தெரியவேண்டும்.அவ்வாறு தெரியாவிடில் மக்கள் கேள்வி கேட்கவேண்டும்.

ஆனால் நிதர்சன உண்மை என்னவெனில் கட்சிகள் ஒட்டுக்கு காசுக்கு கொடுத்து மக்களையும் தங்கள் ஊழலில் கூட்டாளிகளாக சேர்த்துவருகின்றன.

நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!

Comments (2)
  • rajesh  - awareness..
    very nice.. its create awareness definitely..also me.
  • கவி.செங்குட்டுவன்  - கடிதம்
    மிக அருமையாய் வரையப்பட்டுள்ள கட்டுரை. சம்மந்தப்பட்டவர்களுக்கு விளங்கினால் சரி.

    கவி.செங்குட்டுவன்.
Write comment
Your Contact Details:
Comment:
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate::?::(
:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.
Last Updated ( Monday, 21 February 2011 17:00 )