கிரெடிட் கார்டு தொலைந்து போனால் இனி பதற வேண்டியிருக்காது. ஆன்லைனில் அதை முறைகேடாக பயன்படுத்த முடியாத கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்த ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இந்த வசதி ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது. கிரெடிட், டெபிட் கார்டுகளில் பெயர், கார்டு எண், காலாவதியாகும் தேதி, 3 இலக்க பாதுகாப்பு எண் (சிவிவி) ஆகியவை இப்போது உள்ளன. கார்டு தொலைந்தால், அதைக் கண்டெடுக்கும் எவரும் ஆன்லைன் மூலம் முறைகேடாகப் பயன்படுத்த முடிகிறது. ஏடிஎம்மிலோ, வங்கியிலோ நேரடியாக பயன்படுத்தும்போது ரகசிய குறியீட்டு எண் கேட்கப்படுவதால் முறைகேட்டில் ஈடுபட வாய்ப்பு குறைவு.
எனவே, அடுத்தவரின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு கிடைத்தால் ஆன்லைனில் உடனடியாக பண மோசடியில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. இதைத் தடுக்க வங்கிகள், கிரெடிட் கார்டு நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி ஆலோசனை அளித்துள்ளது. அதன்படி 3 இலக்க பாதுகாப்பு எண் தவிர, கூடுதலாக ஒரு பாதுகாப்பு குறியீட்டு எண்ணையோ அல்லது தகவலையோ பதிவு செய்தால் மட்டுமே கார்டைப் பயன்படுத்த முடியுமாறு மாற்றப்பட உள்ளது.
இதற்கான நடவடிக்கைகள் இப்போதே தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய பாதுகாப்பு அம்சங்கள் ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது. இதற்கான சுற்றறிக்கையை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கடந்த பிப்ரவரி 18ல் அனுப்பியது. ஆகஸ்ட் முதல் இதை அமல்படுத்தாத வங்கிகள் பேமென்ட் அண்ட் செட்டில்மென்ட் சிஸ்டம்ஸ் சட்டத்தின் கீழ் அபராதத்தை சந்திக்க நேரிடும் என்றும் ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.
மும்பை, மே 23: கிரெடிட் கார்டு தொலைந்து போனால் இனி பதற வேண்டியிருக்காது. ஆன்லைனில் அதை முறைகேடாக பயன்படுத்த முடியாத கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்த ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இந்த வசதி ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது. கிரெடிட், டெபிட் கார்டுகளில் பெயர், கார்டு எண், காலாவதியாகும் தேதி, 3 இலக்க பாதுகாப்பு எண் (சிவிவி) ஆகியவை இப்போது உள்ளன. கார்டு தொலைந்தால், அதைக் கண்டெடுக்கும் எவரும் ஆன்லைன் மூலம் முறைகேடாகப் பயன்படுத்த முடிகிறது. ஏடிஎம்மிலோ, வங்கியிலோ நேரடியாக பயன்படுத்தும்போது ரகசிய குறியீட்டு எண் கேட்கப்படுவதால் முறைகேட்டில் ஈடுபட வாய்ப்பு குறைவு.
எனவே, அடுத்தவரின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு கிடைத்தால் ஆன்லைனில் உடனடியாக பண மோசடியில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. இதைத் தடுக்க வங்கிகள், கிரெடிட் கார்டு நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி ஆலோசனை அளித்துள்ளது. அதன்படி 3 இலக்க பாதுகாப்பு எண் தவிர, கூடுதலாக ஒரு பாதுகாப்பு குறியீட்டு எண்ணையோ அல்லது தகவலையோ பதிவு செய்தால் மட்டுமே கார்டைப் பயன்படுத்த முடியுமாறு மாற்றப்பட உள்ளது.
இதற்கான நடவடிக்கைகள் இப்போதே தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய பாதுகாப்பு அம்சங்கள் ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது. இதற்கான சுற்றறிக்கையை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கடந்த பிப்ரவரி 18ல் அனுப்பியது. ஆகஸ்ட் முதல் இதை அமல்படுத்தாத வங்கிகள் பேமென்ட் அண்ட் செட்டில்மென்ட் சிஸ்டம்ஸ் சட்டத்தின் கீழ் அபராதத்தை சந்திக்க நேரிடும் என்றும் ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!

kalakunga - yaska - indha article or...
Very Interesting & so many unknown de...
hi read this