உலகநாடுகளில் அனைத்திலும் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையால் உலக நாடுகளின் பங்குச் சந்தைகள் பலத்த வீழ்ச்சி அடைந்துள்ளன. இதில் இந்தியாவும் தப்பவில்லை. சமீபகாலமாக பலத்த அடி வாங்கி வரும் இந்தியா பங்குச் சந்தை பல கோடீஸ்வரர்களை உருவாக்கியது. இதே பங்குச்சந்தை தான் இன்று பல்வேறு குடும்பங்களின் வாழ்க்கை சீரழியவும் காரணமாக இருக்கிறது. இந்திய பங்குச்சந்தைகளின் பலத்த சரிவால் அரசு ஆசிரியர் ஒருவர் தற்கொலை செய்தகொண்டார். அவருக்கு பங்குச் சந்தையில் ரூ.1 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது.
மொராபாத் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் பவா. இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் பலரிடம் பணம் பெற்று பங்குச சந்தையில் நிறைய முதலீடு செய்திருந்தாராம்.
அண்மையில் பங்குச் சந்தையில் பலத்த சரிவு ஏற்பட்டு உள்ளது. பங்கு விலை குறியீட்டெண் சென்செக்ஸ் 11 ஆயிரம் புள்ளிகளை இழந்துள்ளது. இது லட்சக்கணக்கான முதலீட்டாளர்களை பாதித்துள்ளது.
சங்கரும் இதற்குத் தப்பவில்லை. மொத்தம் 1 கோடி ரூபாய் வரை பங்கு முதலீட்டில் நஷ்டம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மொராபாத் ஓட்டஒன்றில் இந்த பரிதாப முடிவை அவர் தேடிக் கொண்டார்.
ரூ.30 லட்சம் நஷ்டத்தால் முறிகிறது மண வாழ்க்கை:
அகமதாபாத்தை சேர்ந்த ஒரு இல்லத்தரசி, பங்குகளில் முதலீடு செய்து 30 லட்சம் ரூபாய் நஷ்டம் அடைந்து உள்ளார். இதனால் அவரை விவாகரத்து செய்யப் போவதாக கணவர் கூறிவிட்டாராம்.
அகமதாபாத்தை சேர்ந்த உளவியல் நிபுணர் ஹன்சால் ஒரு இணையதளம் ஆரம்பித்து உள்ளார். அந்த நிகழ்ச்சியில், தன் வேதனையை கொட்டினார் 34 வயது பெண் ஒருவர். அவரது பெயர் வெளியிடப்படவில்லை.
``34 வயது இல்லத்தரசி நான். திருமணமாகி 10 வருடங்கள் ஆகிறது. ஒரு மகள் இருக்கிறாள். எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் இன்டர்நெட் மூலம் பங்குகள் வாங்கி, விற்றேன். இதன் மூலம் நிறைய சம்பாதித்தேன்.
ஆனால் கடந்த பல மாதங்களாக பங்குச் சந்தை சரிவில் இருக்கிறது. நான் வாங்கிய நிறுவனங்களின் பங்கு விலை குறைந்துவிட்டது. இதனால் எனக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. ரூ.30 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.
பெரும்பாலான முதலீட்டாளர்களுக்கு இப்போது என்னைப் போன்ற நிலைதான். ஆனால் இந்த உண்மையை புரிந்து கொள்ள கணவர் மறுக்கிறார். எனக்கு ஆதரவாக இருக்க மறுக்கிறார். நான் லாபம் சம்பாதித்த போதெல்லாம் அதில் பங்கெடுத்துக் கொண்டவர், இப்போது கைகழுவிவிட்டார். என்னை விவாகரத்து செய்யப் போவதாக கூறுகிறார். நஷ்டத்தில் தான் பங்கேற்க விரும்பவில்லை என்கிறார். இனி நான் என்ன செய்வது எனக் கேட்டு அனைவரையும் அதிர வைத்தார்.
பங்குச் சந்தை பாதிப்புகள், குடும்ப வாழ்க்கையை சிதைக்கிறதே என்ற வருத்தம் அனைவருக்கும் ஏற்பட்டது. பங்குச் சந்தை முதலீடு செய்த பல பெண்களுக்கு இப்போது குடும்ப வாழ்க்கையிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக டாக்டர் தெரிவித்தார்.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!





