இந்திய பங்குச் சந்தை கடந்த ஒரு வருட காலமாகவே தள்ளாடி வருகின்றனது. இந்நிலையில் கடந்த வாரம் ஏற்பட்ட கடும் சரிவால் நாட்டின் முன்னணியில் உள்ள 10 நிறுவனங்களுக்கு மட்டும் ரூ.1.5 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது. இதில் ரூ.45,600 கோடியுடன் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும் நஷ்டத்திலும் முன்னணி வகிக்கின்றனது.
கடந்த வாரத்துக்கு முன்பு வரை நாட்டின் முன்னணி 10 நிறுவனங்களின் சொத்து பங்கு மதிப்பு ரூ.10.44 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த வாரத்தில் மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் அதல பாதாளத்துக்கு சரிந்ததால் 10 நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.1.5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு, பங்கு மதிப்பு ரூ.8.94 லட்சம் கோடியாகி விட்டது.
அதிகபட்சமாக ரூ.45,600 கோடி சரிவைச் சந்தித்து ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவனம், இழப்பில் முதலிடம் வகிக்கிறது. அதனால், அந்நிறுவன சொத்து மதிப்பு ரூ.2 லட்சம் கோடிக்கும் கீழ் இறங்கி விட்டது. அந்நிறுவனம் கடந்த வாரத்தில்தான் இந்த நிதி ஆண்டில் இரண்டாவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. அதில் நிகர லாபம் 7.4 சதவீதம் அதிகரித்து ரூ.4,122 கோடி எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நிறுவனத்தின் வருவாயும் 39.4 சதவீதம் உயர்ந்து ரூ.44,938 கோடியானது. கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் சென்செக்ஸ் வீழ்ச்சியில் அதன் பங்கு விலை சரிந்து ரூ.29,038 கோடி நஷ்டம் ஏற்பட்டது. மொத்த இழப்பான ரூ.45,600 கோடியில் மீதமுள்ள நஷ்டம் மற்ற மூன்று நாட்களில் ஏற்பட்டது.

நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!