Saturday
Jul 31st
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மும்பை பங்குச் சந்தை மூன்று ஆண்டுகளில் இல்லாத சரிவு

E-mail Print PDF

மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் கடந்த மூன்று ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்தது. வாரத்தின் இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை (03.03.09) 180 புள்ளிகள் சரிந்ததால் குறியீட்டெண் 8,427 புள்ளிகளாகக் குறைந்தது.

 

ஆசியச் சந்தையில் ஏற்பட்ட சரிவு, வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை ஏற்பட்ட சரிவு ஆகியவற்றிலிருந்து மீளாத நிலையில் செவ்வாய்க்கிழமை வர்த்தகம் தொடங்கியது.

 

மதியம் வரை வர்த்தகம் சுமாராக இருந்தது. அதன் பிறகு பங்கு விற்பனை அதிகரித்தது. அத்துடன், பங்குகளின் விலையும் சரமாரியாகக் குறைந்தது. அதன் எதிரொலியாகக் குறியீட்டெண் வீழ்ச்சி தடுக்க முடியாததாகி விட்டது. ஒரு கட்டத்தில் குறியீட்டெண் 8,390 புள்ளிகள் வரை கீழிறங்கியது. பின்னர் வர்த்தகம் முடியும் போது 180 புள்ளிகள் சரிந்து 8,427 புள்ளிகளாக இருந்தது.

 

தேசியப் பங்குச் சந்தையிலும் 52 புள்ளிகள் குறைந்து குறியீட்டெண் 2,622 புள்ளிகளானது.

 

30 பங்குகள் விற்பனையானால் 3 பங்குகளின் விலைகள் மட்டுமே சற்று அதிக விலைக்கு விற்பனையானது. எஞ்சிய பங்குகள் அனைத்தும் சரிவைச் சந்தித்தன.

 

கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவாக குறியீட்டெண் 7,000 புள்ளிகள் வரை சரியுமோ என்ற அச்சமும் முதலீட்டாளர்களிடம் ஏற்பட்டது. இதனால் பங்குகளை வாங்குவதில் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை.

 

திங்கள்கிழமை அன்னிய நிறுவனங்கள் ரூ. 580.43 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.

 

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததால், அன்னிய முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை முதலீட்டைத் தவிர்த்தனர்.

 

ஜனவரி மாதத்தில் ஏற்றுமதி பாதிக்கப்பட்ட தகவலும் வர்த்தக பாதிப்புக்குக் காரணமாக அமைந்தது. தொடர்ந்து நான்காவது மாதமாக இந்திய ஏற்றுமதி சரிவைச் சந்தித்ததும் முதலீட்டாளர்களின் கவலை அதிகரிப்புக்கு காரணமாக அமைந்தது. அமெரிக்காவின் சர்வதேச குழுமம் நஷ்டத்தை எதிர்கொண்டதால், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்கு விலைகள் சரிவைச் சந்தித்தன.

 

இன்ஃபோசிஸ் பங்கு விலை 1.74 சதவீதம் சரிந்து ரூ. 1,197.60-க்கும், டிசிஎஸ் பங்கு விலை 3.12 சதவீதம் குறைந்து ரூ. 445.15-க்கும், விப்ரோ நிறுவனப் பங்குகள் 1.16 சதவீதம் குறைந்து ரூ. 200.50-க்கும் விற்பனையாயின. டாடா பவர் நிறுவனப் பங்கு விலை 6.41சதவீதம் குறைந்தது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 4.44 சதவீதமும், ஐடிசி 3.75 சதவீதமும், எச்டிஎஃப்சி 2.95 சதவீதமும், பார்தி ஏர்டெல் 2.60 சதவீதமும், ஐசிஐசிஐ வங்கி 2.56 சதவீதமும் சரிந்தன.

 

மொத்தம் 1,595 நிறுவனங்களின் பங்கு விலைகள் சரிவைச் சந்தித்தன. 810 நிறுவனப் பங்கு விலைகள் மட்டுமே சற்று அதிக விலைக்கு விற்பனையாயின.

 

செவ்வாய்க்கிழமை மொத்தம் ரூ. 2,550.79 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது. ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் ரூ. 220.27 கோடிக்கும், ஐசிஐசிஐ வங்கி ரூ. 204.26 கோடிக்கும், எடுகாம்ப் சொல்யூஷன்ஸ் ரூ. 143.42 கோடிக்கும், ரிலையன்ஸ் இன்பிராஸ்டிரக்சர் 118.72 கோடிக்கும், எஸ்பிஐ பங்குகள் ரூ. 117.83 கோடிக்கும் விற்பனையாயின.


நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!
Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate::?::(
:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.
 
Banner

எங்கள் செய்திச்சேவையைபெற


1
விஷூவல் மீடியா

ட்விட்டரில் தொடர

உள்நுழைய

  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    REGISTER_REQUIRED