Sunday
Feb 05th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

Reliance, ICICI பங்குகள் வீழ்ச்சி

E-mail Print PDF

மும்பை பங்குச் சந்தையில் பங்குகளின் விலைகள் தொடர்ந்து சரிவைச் சந்தித்தன. வட்டி குறைப்பு அறிவிப்பை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையிலும் வியாழக்கிழமை பங்கு விலைச் சரிவு தடுக்க முடியாத அளவுக்குக் கீழிறங்கியது.

 

இதனால் பங்குச் சந்தை குறியீட்டெண் கடந்த 40 மாதங்களில் இல்லாத அளவாக 8,197 புள்ளிகள் குறைந்தன. வியாழக்கிழமை மட்டும் 249 புள்ளிகள் சரிந்தது. 2005-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதிக்குப் பிறகு பங்குச் சந்தை குறியீட்டெண் இந்த அளவுக்குக் கீழிறங்கியது இதுவே முதல் முறை.

 

தேசிய பங்குச் சந்தையிலும் 68 புள்ளிகள் கீழிறங்கியதால் குறியீட்டெண் 2,576 புள்ளிகளாக சரிந்தது. வியாழக்கிழமை வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே மிக அதிக அளவில் பங்கு விற்பனை இருந்தது. ஒரு கட்டத்தில் குறியீட்டெண் 8,166 புள்ளிகள் வரை கீழிறங்கியது.

 

பங்குச் சந்தையில் அனைவராலும் விரும்பப்படும் ரிலையன்ஸ் நிறுவனப் பங்கு விலை 5 விழுக்காடு சரிந்தது. இதுவே சந்தையின் அதிக சரிவுக்கு முக்கியக் காரணம். இதற்கு அடுத்தபடியாக நாட்டின் தனியார் வங்கிகளில் அதிகக் கிளைகளைக் கொண்டுள்ள ஐசிஐசிஐ வங்கிப் பங்கு விலையும் 5 விழுக்காடு சரிந்தது. ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு அறிவிப்பு வங்கிப் பங்குகளின் வீழ்ச்சியைத் தடுக்கவில்லை.

 

எண்ணெய், எரிவாயு நிறுவனங்களின் பங்கு விலைகளும் சரிவைச் சந்தித்தன. மொத்த குறியீட்டெண்ணில் 54.41 புள்ளிகள் சரிவு இத்துறை பங்குகளால் ஏற்பட்டது.

 

விடியோகான் மற்றும் டைட்டன் நிறுவனப் பங்குகள் மட்டும் சற்று அதிக விலைக்கு விற்பனையாயின.


நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate::?::(
:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.
 

உள்நுழைய

  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    REGISTER_REQUIRED