கடுமையான நிதிச் சிக்கல் காரணமாக சத்யம் நிறுவனப் பங்குகள் 80% வீழ்ச்சியைச் சந்தித்தன.
இந்நிலையில் நிறுவனத்துக்குத் தேவையான நிதி ஆதாரத்தைத் திரட்ட செபி ஒப்புதல் அளித்துள்ளது. சர்வதேச ஏல முறையில் பங்குகள் விற்பனை செய்யப்படும்.
நிதி மோசடி குறித்து விசாரணை நடைபெற்றுவரும் நிலையில் 51 சதவீத பங்குகளை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நிறுவனப் பங்குகளை வாங்க விரும்பும் நிறுவனங்கள் முன்னுரிமை அடிப்படையில் 31 சதவீத பங்குகளை வாங்கலாம். இதில் 20 சத பங்குகள் சத்யம் நிறுவனம் வசம் இருக்கும்.
51 சதவீத அளவுக்கு பங்கு விற்பனை மூலம் திரட்ட முடியாமல் போனால் முதலீட்டாளர்கள் கூடுதல் முதலீடு செய்ய வேண்டும். பங்கு ஏலம் குறித்த விவரத்தை நிறுவனம் விரைவில் வெளியிடும். பங்கு விற்பனைக்கு "செபி' அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, பங்குச் சந்தையில் அந்நிறுவனப் பங்குகளின் விலை 14 % உயர்ந்தது. மும்பை பங்குச் சந்தையில் சத்யம் பங்குகள் ரூ. 39.50-க்கு விற்பனையாயின.
ஏல நடைமுறை வெளியான பிறகே சத்யம் நிறுவனப் பங்குகளை வாங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்று ஹிந்துஜா குழும தலைமை நிதி அதிகாரி தெரிவித்தார். சத்யம் நிறுவன அறிக்கையைப் படித்த பிறகே அது பற்றித் தீர்மானிக்க முடியும் என்று டெக்-மஹிந்திரா நிறுவன துணைத் தலைவர் கூறினார்.
சத்யம் பங்குகளை வாங்க விருப்பம் தெரிவிக்கும் நிறுவனங்களின் குறைந்தபட்ச சொத்து மதிப்பு ரூ. 750 கோடிக்கு அதிகமாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்யம் பங்குகளை வாங்க லார்சன் அன்ட் டியூப்ரோ நிறுவனம் ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ளது. அந்நிறுவனம் தற்போது சத்யம் கம்ப்யூட்டரின் 12% பங்குகளை வைத்துள்ளது.
நிறுவனத்தின் தற்போதைய நிதி நிலவரம் முற்றிலும் தெரியாத நிலையில் இந்நிறுவனப் பங்குகளை வாங்கும் நிறுவனங்கள் சட்டச் சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!








i need prokar
sir, I am from Ilayangudi.I want to ...
robot ன்னு இருந்தாலும் ரோபோன்னுதான் ...
wah! Great info.
good..................., but common n...