மோசடியில் சிக்கியுள்ள சத்யம் கம்ப்யூட்டர்ஸ் பங்கு விலை கடும் சரிவில் பாதிக்கப்பட்ட சுமார் 3 லட்சம் சிறு முதலீட்டாளர்கள் சார்பில், ரூ.5,000 கோடி இழப்பீடு கேட்டு செய்த மனுவை டெல்லி நுகர்வோர் கமிஷன் தள்ளுபடி செய்துவிட்டது.
ராமலிங்க ராஜு தலைமையில் இருந்த சத்யம் நிறுவனம் ரூ.7,800 கோடி மோசடி வழக்கில் சிக்கியுள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் அதன் பங்கு விலை ரூ.544 ஆக இருந்தது.
மோசடி அம்பலமானதும் மிகக் குறைந்த அளவாக அதன் பங்கு விலை ரூ.11.50க்கு வீழ்ந்தது. இப்போது சிறிது முன்னேறி ரூ.45 ஆக உள்ளது.
இந்நிலையில், சத்யம் கம்ப்யூட்டர்ஸ் மோசடியால் பங்கு விலை திடீரென சரிந்து நஷ்டம் ஏற்படுத்தியதற்கு அந்நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அமெரிக்க நுகர்வோர் நீதிமன்றங்களில் 6 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
அதே வழியைப் பின்பற்றி இந்தியாவைச் சேர்ந்த சிறு முதலீட்டாளர்கள் சுமார் 3 லட்சம் பேர் டெல்லியைச் சேர்ந்த எம்டிஐஏ அமைப்பின்கீழ் இப்போது டெல்லி நுகர்வோர் கமிஷனில் வழக்கு தொடர்ந்தனர்.
தங்கள் நஷ்டத்துக்கு இழப்பீடாக ரூ.5,000 கோடி வழங்க உத்தரவிடுமாறு அவர்கள் கோரியுள்ளனர்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கமிஷனின் தலைமை நீதிபதி குப்தா, உறுப்பினர் ராஜலட்சுமி ராவ் ஆகியோர் வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுத்தனர்.
ÔÔஇதுபோன்ற வழக்கை கையாளக்கூடிய கட்டமைப்பு கமிஷனிடம் இல்லை. ஏற்கனவே இந்த விவகாரத்தை சிபிஐ தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டுள்ளது. எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறதுÕÕ என்று அவர்கள் தெரிவித்தனர்.
நுகர்வோர் கமிஷனின் இந்த நடவடிக்கை சிறு முதலீட்டாளர்களிடம் ஏமாற்றத்தையும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தும் என வழக்கு தொடர்ந்த எம்டிஐஏ அமைப்பு தெரிவித்தது.

நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!