பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி நிலையான ஆட்சி அமைக்கும் அளவு வெற்றி பெற்றதால் பங்குச் சந்தை உயர்ந்ததில் அம்பானி சகோதரர்களின் ரிலையன்ஸ் குழுமப் பங்குகளின் மதிப்பு ரூ.90,000 கோடி உயர்ந்துள்ளது..
இந்தியா நாடாளுமன்றத்தின் தேர்தல் முடிவுகள் கடந்த 16ம் தேதி சனிக்கிழமை வெளியாகின. காங்கிரசின் வெற்றியால் திங்கட்கிழமை (18ம் தேதி) பங்குச் சந்தை தொடங்கிய சில மணி நேரங்களில் சென்செக்ஸ் 2,110 புள்ளிகள் உயர்ந்தது. பங்குச் சந்தை வரலாற்றில் இதுவரை காணாத அதிகபட்ச உயர்வு அது.

இதன்மூலம், கடந்த ஒரு வார சென்செக்ஸ் புள்ளிகள் அதிகரிப்பால் ஒட்டுமொத்த முதலீட்டாளர் சொத்து மதிப்பு ரூ.38.07 லட்சம் கோடியில் இருந்து ரூ.45.6 லட்சம் கோடியானது.
இது ஐந்தே வர்த்தக நாட்களில் ரூ.7.51 லட்சம் கோடி உயர்வாகும். அதிகபட்சமாக முகேஷ் அம்பானி, அனில் அம்பானியின் இரண்டு ரிலையன்ஸ் குழுமங்களைச் சேர்ந்த நிறுவனங்களின் மொத்த பங்கு மதிப்பு மட்டும் ரூ.90,000 கோடி உயர்ந்தது.
இது ரூ.7.51 லட்சம் உயர்வில் 12 சதவீதம் ஆகும். ரிலையன்ஸ் குழுமங்களின் பங்கு மதிப்பு உயர்வு 35 சதவீதம்.அம்பானி சகோதரர்களின் ரிலையன்ஸ் குழுமங்கள் பங்கு மதிப்பு உயர்வில் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான நிறுவனங்களின் பங்கு மட்டும் ரூ.44,000 கோடி. அனில் அம்பானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு ரூ.43,800 கோடி அதிகரித்தது.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!

i need prokar
sir, I am from Ilayangudi.I want to ...
robot ன்னு இருந்தாலும் ரோபோன்னுதான் ...
wah! Great info.
good..................., but common n...