Saturday
Sep 04th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தமிழ் இணைய பயிலரங்கு வரும் சனி்க்கிழமை அன்று

E-mail Print PDF

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கம் எதிர்வரும் சனவரி
30,காரி(சனிக்)கிழமை நடைபெற உள்ளது..மிகச் சிறந்த தமிழ் அறிஞர்கள் உலவிய இடத்தில் நின்று  தமிழ் இணைய வளர்ச்சிக்குக் குரல்கொடுப்பது சிறப்பிற்கு உரிய ஒன்றாகும்.நிகழ்ச்சி விபரம்

தமிழ் இணையப் பயிலரங்கம் தொடக்கவிழா

நாள்: 30-01-2010,சனிக்கிழமை நேரம்: முற்பகல் 10.00 - 11.00 மணி

இடம்: கருத்தரங்க அறை - பொறியியற் புலம்; (Conference Hall –FEAT)


வரவேற்புரை : முனைவர் பழ. முத்துவீரப்பன்,

பேராசிரியர், தமிழியல் துறைத் தலைவர்;

முதன்மையர்-இந்தியமொழிப்புலம்,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

தலைமையுரை: டாக்டர் ம. இராமநாதன் எம். எஸ்., எப்.ஆர்.சி.எஸ்.,துணைவேந்தர்,

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

வாழ்த்துரை : பேராசிரியர் பா. பழனியப்பன்,

முதன்மையர்,பொறியியல் புலம்,

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

பேராசிரியர் : வ. ஜெயதேவன்,

சிறப்புநிலைப் பேராசிரியர்,தமிழ் இலக்கியத் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்,சென்னை-5.

 

பயிலரங்கத் திட்டம்-நிகழ்ச்சி நிரல்

முதல் அமர்வு : முற்பகல் 11.00 12.00

தலைப்பு: தமிழும் இணையமும்

முனைவர் மு. இளங்கோவன்,

(தமிழ்த் துணைப்பேராசிரியர், பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி,புதுச்சேரி.)

முற்பகல் : 12.00-1.00

தலைப்பு: வலைப்பூ உருவாக்கமும் பயன்பாடுகளும்

திரு. தமிழ்நிலவன், மென்பொருள் வல்லுநர்,பெங்களுரு.

உணவு இடைவேளை 1.00-200

இரண்டாம் அமர்வு : 2.00- 2.30

தலைப்பு: விக்கி மேப்பியா,

திரு. ஒரிசா பாலு, கடலாய்வு வல்லுநர், சென்னை.

பிற்பகல் 2.31 - 3.00

தலைப்பு: இணைய இதழ்கள்

முனைவர் மு. இளங்கோவன்,

தமிழ்த் துணைப்பேராசிரியர், பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி,புதுச்சேரி.

பிற்பகல் 3.01 - 3.30 :

தலைப்பு: தமிழ் விக்கிபீடியா பற்றிய அறிமுகம் , - விக்கி பங்கேற்பாளர்கள்

பிற்பகல் : 3.31 - 4.00 தலைப்பு: இணையதளப் பதிவுகளில் தனிநபர் பங்களிப்பு

திரு. விசயகுமார், ஆசிரியர் - சங்கமம் லைவ்,நாமக்கல்

பிற்பகல் 4.01 - 4.15

தலைப்பு: இணையதளப் பாதுகாப்பு திரு. செல்வமுரளி,, தமிழ்வணிகம்.

பிற்பகல் 4.16 - 4.25

பங்கேற்பாளர்களின் மதிப்பீடு

நன்றியுரை : பேராசிரியர் பா. மாலினி, தமிழியல்துறை

சிக்கனம் அவசியம்
பெட்ரோல் விலை உயர்வு தவிர்க்க முடியாத ஒன்று என்று பிரதமர் மன்மோகனும் சுட்டிக்காட்டியுள்ளார். விலை ஏற்றத்தில் நடுத்தர மக்கள் பாதிக்காமல் இருக்க பெட்ரோலை சிக்கனமாக பயன்படுத்துவது அவசியம். மேலும், பேட்டரியால் இயங்கும் வாகனங்களை உபயோகிக்கலாம். வேகம் குறைவாக இருந்தாலும் இதுதான் விவேகமானது. ரூ. 5 ல் 70 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க முடியும். அதுமட்டுமின்றி சுற்றுப்புறம் மாசு ஏற்படாது என்பது வரப்பிரசாதம். நீண்ட தூர பயணங்களுக்கு அரசு பேருந்து, ரயிலிலும், கடைகள் மற்றும் காய்கறி மார்கெட்டிற்கு சைக்கிள்களையும் பயன்படுத்துவதன் மூலம் பெட்ரோல் விலையேற்றத்தில் இருந்து நடுத்தர மக்கள் ஓரளவு தப்பித்துக்கொள்ள முடியும்.




மரபு சாரா எரிசக்திகள்:
1. காற்றாலை
உலகளவில் மின்சாரம் தயாரிக்கும் மாற்று சக்தியாக காற்றாலைகள் உள்ளன. உயரமாக நிற்கவைக்கப்பட்டுள்ள காற்றாடிகள் காற்றில் வேகமாக சுற்றும் போது சுழலும் டைனமோ மூலம் மின்சாரம் கிடைக்கிறது. கடந்த ஆண்டு தமிழகம் காற்றாலை மூலம் ஆண்டுக்கு 360 மெகாவாட் மின் உற்பத்தி செய்து இந்தியாவில் முதல் இடத்தை பிடித்தது. ஆனால், இந்த ஆண்டு குஜராத் காற்றாலை மூலம் 616 மெகாவாட் மின்சாரத்தை தயாரித்து முதலிடத்திற்கு சென்று விட்டது. அனைத்து மாநிலங்களையும் குஜராத் ஆக மாற்றுவதன் மூலம் நாடு மின் உற்பத்தியில் தன்னிறைவு அடையும் என்பதில் ஐயமில்லை. காற்றாலை மின் உற்பத்தியில் உலகளவில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது.

2. சூரிய சக்தி
மின்சக்தியை செலுத்தும் போது சில உலோகங்கள் வெப்பம் அடைகிறது. அதே போல் வெப்பமடையும் சில உலோகங்கள் மின் உற்பத்தி செய்கின்றன. சூரிய வெப்பத்தை ஒருங்கிணைத்து உலோகங்களை வெப்பமடைய செய்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. சமையல் அடுப்பு, சுடுதண்ணீர் தயாரிக்க, விளக்குகள் எரியவைக்க சூரிய சக்தி பயன்படுத்தப்படுகிறது. வெளிநாடுகளில் சூரிய சக்தியில் இயங்கும் காரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் ஒரு லட்சம் வீடுகளில் சூரிய அடுப்புகள் உள்ளதாகவும் விரைவில் 18 ஆயிரம் சூரிய அடுப்புகளை விற்க திட்டமிட்டுள்ளதாகவும் குஜராத் எரிசக்தி வளர்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.

3. பயோடீசல்

காட்டு ஆமணக்கு, புங்கன் விதை ஆகியவற்றின் மூலம் உற்பத்தியாகும் எண்ணெய் பயோ டீசல் என்றழைக்கப்படுகிறது. இப்போதுதான் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இப்பயிர்கள் வளர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. புங்கன் விதையில் கிடைக்கும் எண்ணெயை வடிக்கட்டி ரசாயன மாற்றங்களுக்கு பின் டீசல் இன்ஜின் வாகனங்களுக்கு எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. கரும்பு மூலம் கிடைக்கும் எத்தனால் மூலமும் எரிபொருள் தயாரிக்கப்படுகிறது.

4. பயோகேஸ்
சாணம், அழுகிய பழங்களில் இருந்து மீத்தேன் வாயு உருவாகிறது. பயோ கேஸ் என்ற இந்த வாயு மூலம் அடுப்பு, விளக்குகள் எரிய வைக்க முடியும். மேலும் இவ்வாயுவை பயன்படுத்தி டைனமோவை இயக்குவதன் மூலம் மின்சாரமும் தயாரிக்கப்படுகிறது. விலங்கு, பறவை, மனித சாணங்களில் இருந்து பயோ கேஸ் தயாரிக்க முடியும்.

5. நீர்மின்சக்தி

வேகமாக செல்லும் தண்ணீரில் டைனமோவை சுழல வைப்பதன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அணைகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரை திறந்து விடுவதன் மூலமும், நீர்வீழ்ச்சி, வேகமாக அடிக்கும் கடல் அலைகள் மூலம் நீர் மின்சக்தி தயாரிக்கப்படுகிறது.

பணவீக்கம் உயரும்

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்படும். வாடகை உள்ளிட்ட செலவு உயர்வால் ஏற்கனவே அதிகரித்து வரும் அத்தியாவசியப்பொருட்களின் விலை இன்னும் அதிகரிக்கும். இதனால் 8.1 சதவீதமாக இருக்கும் நாட்டின் பணவீக்கம் புதிய சிகரத்தை நோக்கி உயரும் என்பதில் ஐயமில்லை.


வாய்ப்பும் உற்பத்தியும்

இந்தியாவில் மரபுச்சாரா எரிசக்தி உற்பத்தி செய்ய உள்ள வாய்ப்பு மற்றும் உற்பத்தி செய்யப்படும் அளவு குறித்தும் எம்என்இஎஸ் நிறுவனம் கணக்கெடுத்தது. அதன் விபரம் வருமாறு:
காற்றாலை மூலம் 45 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஆனால் தற்போது 1,870 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. 19,500 மெகாவாட் மின்சாரம் பயோகேஸ் மூலம் தயாரிக்க முடியும் என்றாலும் நாம் 537 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தயாரிக்கிறோம்.
சிறிய நீர்மின் நிலையங்கள் மூலம் 15,000 மெகாவாட் தயாரிப்பதற்கு பதில் 1,519 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தயாராகிறது.
பயோ டீசல் தயாரிப்பு இன்னும் வர்த்தக ரீதியாக விற்பனை செய்யும் அளவிற்கு முன்னேற வில்லை. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உள்ளிட்ட தமிழகத்தின் சில இடங்களில் புங்கை காயில் இருந்து பயோ டீசல் தயாரிக்கும் மாதிரி ஆலைகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன.

எம்.தரணிபாபு

நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!
Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate::?::(
:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.
 
Banner

எங்கள் செய்திச்சேவையைபெற


1
விஷூவல் மீடியா

ட்விட்டரில் தொடர

உள்நுழைய

  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    REGISTER_REQUIRED